பக்கம்:நீலா மாலா.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

2. அம்மாவுக்கு ஆபத்தா? விழா முடிந்ததும், கலெக்டர் தம்முடைய களிலேயே பரமசிவம் பிள்ளையையும், தலைமை ஆசிரியர் தணிகாசலத்தையும் ஏற்றிக் கொண்டார். 'அந்தப் பெண் வீடு எங்கே இருக்கிறது ? டிரைவருக்கு வழி சொல்லுங்கள்’ என்ருர் கலெக்டர். சிறிது கேரத்தில் கலெக்டரின் கார், ஊரின் கடைசியில் இருக்த குடிசைப் பகுதிக்கு வந்தது. அப்போது இரவு மணி எட்டு இருக்கும். "இதோ இந்தக் குடிசைதான்' என்று கூறித் தலைமை ஆசிரியர் ஒரு குடிசையைக் காட்டினர். டிரைவர் காரை அந்தக் குடிசையின் முன்னல் கிறுத்தினர். கார் கின்றதும் எல்லாரும் வேக மாகக் கீழே இறங்கினர்கள். தலைமை ஆசிரியர் முன்னுல் சென்ருர். அங்தக் குடிசைக்குள் அரிக்கேன் விளக்கு மங்கலாக எரிந்து கொண்டிருந்தது. எந்த வித சப்தத்தையும் காணுேம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/20&oldid=1021569" இலிருந்து மீள்விக்கப்பட்டது