பக்கம்:நீலா மாலா.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பல்கலை வித்தகர் மீ. ப. சோமு அவர்களின்

அணிந்துரை

“இந்தப் பத்திரிகையில் வெளியாகும் கதைகளில் வரும் பெயர்கள் யாவும் கற்பனையே; சம்பவங்களும் கற்பனையே" என்று ஒரு வாக்குறுதியை நம்முடைய பத்திரிகைகளில் 'பளிச்' சென்று தெரிகிற ஓர் இடத்தில் - போடுகிறார்கள் அல்லவா? அந்தக் காலத்தில் எல்லாம் கதைகள் மட்டும் அல்லாமல், பத்திரிகையில் - வெளிவருகிற எல்லாவற்றுக்கு மாக மொத்தமாகச் சேர்த்து அவை யாவும் கற்பனையே - என்று வாக்குறுதி கொடுத்துக் கொண்டிருந்தார்கள். ஒரு நாள் ராஜாஜி என்னிடம் கேட்டார்கள்: இது என்ன இப்படி ஓர் அறிவிப்புப் போடுகிறீர்கள்? - உங்களுடைய அரசியல் கட்டுரைகள் தலையங்கங்களுக்கும் இந்த வாக்குறுதி பொருந் தாதா? என்று.

'நான் கல்கி பத்திரிகையின் ஆசிரியப் பொறுப்பில் இருந்த சமயம் அது. இதைத் தொடர்ந்து அந்த அறிவிப்பில் . எப்படி மாறுதல் செய்யலாம் என்று யோசித்தோம். பிறகு, கற்பனைக் கதைகளுக்கு மட்டும் பொருந்துகிற முறையில் இந்த அறிவிப்பை உரிய மாறுதலோடு வெளியிடத் தொடங் கினோம்.

இந்த நிகழ்ச்சி எனக்கு இப்போது இந்த நூலைப் படிக்கும் போது நினைவுக்கு வருகிறது. நண்பர் அழ. வள்ளியப்பா எழுதியுள்ள 'நீலா மாலாவை முழுமையாகப் படித்து முடித் ததும், இந்தக் கதையில் வரும் பெயர்கள் யாவும் கற் பனையே; சம்பவங்களும் கற்பனையே என்று சொல்வதற்குப் பதிலாக, இந்தக் கதையில் வரும் பெயர்களில் பெரும் பாலானவை கற்பனையே; சில பெயர்கள் மட்டும் உண்மைப் பெயர்களே; சம்பவங்களும் பெரும்பாலும் கற்பனையே; சில பட்டும் உண்மை நிகழ்ச்சிகளே என்று அந்த அறிவிப்பில் ஒரு மாறுதல் செய்து சொல்லலாம் என்று தோன்றுகிறது.

நீலா மாலா கதை வாழ்க்கையோடு ஒட்டிய கற்பனை என்பதோடு கூட, நமது சமுதாய வாழ்வில் நடைபெற்ற கில் நிகழ்ச்சிகளும், நமது வாழ்வில் நம்மோடு வாழ்ந்து மறைந்த சில பெரியோர்களும், இன்றைக்கும் 'நம்மோடு வாழ்ந்து வருகிற சில பெரியோர்களும் இந்தக் கதையில் இடம் பெறு கிறார்கள். வள்ளியப்பா அந்தக் கதாபாத்திரங்களையெல்லாம், கற்பனைப் பாத்திரங்களோடு இணைத்து வளையவிட்டிருக்கிறார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/5&oldid=1037017" இலிருந்து மீள்விக்கப்பட்டது