பக்கம்:நூறாசிரியம்.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

237


ஒன்றும் நெஞ்சொடு - கருத்து வேறுபாடற்றுப் பொருந்தி ஒரே எண்ணத்தோடு கூடிய நெஞ்சோடு

தொல்லோர் மரபின் அரசர் - பழம் பாண்டிய, சோழ, சேரர் என்னும் மரபில் வந்த அரச வழியினர்.

வல்லோ அல்லர்- தவம் முதலிய அருந்திறல்களால் வலிமை பொருந்திய துறவிகள் வழியினரும் அல்லர்.

பொருளும் - விழையாராகி அறவழிகளால் ஈட்டிய பொருளும், அதன் வழி இன்பமும் கூடிய, இருள்தீர்ந்த தூய வாழ்க்கையும் விரும்பாதவர்கள் ஆகி.

அற்றைத் தமிழ்த்தாய் - பன்னெடுங்காலம் முந்தித் தோன்றிய தமிழ் என்னும் தாய்.

இற்றை மகர் - இன்று இக்காலத்துள்ள மக்கள்.

ஒற்றைத் தனி நீள் நினைவு - ஒன்றேயாகித் தனித்து நின்ற நெடிய நினைவாகிய தமிழின் முன்னேற்றம்.

மூவா இளமை--ஏய்ந்த முதுமையுறாமல் என்றும் இளமைத் தன்மையே சார்ந்த மிகப் பழமையான மொழியாகிய தமிழ் மொழிக்கு வந்து பொருந்திய,

தாவாப் பெருந்துயர் நீங்காத பேரிடர்.

நெய்யெரி புகுத்திய புகழோர் - நெய்யினால் தோற்றிக் கொண்ட எரியில் தன் உடலைப் புகுத்திக் கொண்டு மாய்ந்த புகழை உடையவர்.

மெய்யழி பட்ட - உடலம் மாய்த்துக் கொண்ட

கொடுங்குறை யுறுப்பொடு - உறுப்புகள் குறைந்த கொடுமையான நிலையொடு.

யாங்கன் -- வினை - இம் மொழிப் போராட்டத்திற்கென வெழுந்த மாணவர் எழுச்சியை அடக்குவான் வேண்டி இக்கொடிய அரசு மேற்கொண்ட கடிய நடவடிக்கைகளையும் அவற்றினால் ஏற்பட்ட தீய விளைவுக்ளையும் எவ்வாறு உரைப்பல் என்றபடி

ஈர்ந்தண் உலகம் - குளிர்ந்த தண்ணிர் சூழ்ந்த இந்த உலகம்.

இருள் நீள் விசும்பு - நீண்ட இருள் தோய்ந்து கிடக்கும் இவ் வானம்.

‘செந்தமிழ் வாழ்க'வென முழக்கமிட்டுக் கூறி ஊர்வலம் வரும், அவ்விளைமையோர்க்கு வானையும் இந்நிலத்தையும் பரிசிலாகக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/263&oldid=1221101" இலிருந்து மீள்விக்கப்பட்டது