பக்கம்:நூறாசிரியம்.pdf/378

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

352

நூறாசிரியம்


சூழ்பாவது இடமும், உடனிருப்போரும், ஒட்டிநிற்கும் வினையும், இடையூறும், விளைவும் பிறவுமாம்.

பழுதுகண்டு அடங்கி விழுப்பத்து உரைப்பே - குறைபாடு கண்டவிடத்துப் பொள்ளென அதனை வெளிப்படுத்தாது அடங்கியிருந்து சிறப்பினைக் கூறுமுகத்தான் வெளியிடுதல்.

விழுப்பம் - சிறப்பு.

படுவழிப் படுத்து விடுழி விடுப்பே - பொருட் செல்வம் வருகின்றபோது அதனை முறையாகக் காத்துவைத்துச் செலவிடத் தேவையானவிடத்துச் செலவிடுதல்.

படுதல்- பொருந்துதல், வந்து சேர்தல்.

வடுவில் கற்பின் நெடுநிலைக் காப்பே - குற்றமற்ற கற்பென்னும் உயர்ந்த நிலையைத் தற்காத்துக் கொள்ளுதல்.

குற்றமற்ற கற்பு என்றது மனத்தாற் குற்றப்படாமையை. ஆதலின் அது நெடுநிலையினது என்றும் கூறப்பட்டது.

காப்பு - தற்காப்பு.

என்று இவை மானும் இளையோன் - இவ்வாறு மேற்கூறப்பட்ட நற்குண நற்செயல்கள் நிறைந்த இளைஞையின்

வென்றிய நிலைக்கு வேறுஎன் வேண்டுவல் - இல்லற வெற்றி நிலைக்கு யான் வேறென்ன வேண்டுவேன்.

இப்பாடல் பெருந்திணை என்னும் புறத்தினையும் கொண்மகள் மாண்பு என்னும் புதுத்துறையுமாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/378&oldid=1209395" இலிருந்து மீள்விக்கப்பட்டது