பக்கம்:நூறாசிரியம்.pdf/398

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

372

நூறாசிரியம்


89 எய்ப்பில் வைப்பு


வானத் தாயினுங் குன்றத் தாயினும்
னேற் றிலங்கும் ஆழிய தாயினும்
முயல்வின் கொண்மர் பொருள்வேட் டோரே!
பயன்றெரி கல்லாப் பாடில மாக்கள்
அணிமைத் தாயினும் அஃதறி யாரே! 5
குளகு கொறிக்கும் பாசுடல் நெடும்புழு
இணாநறுந் தேறல் அறியாதா கின்றே!
கெடிறின மெச்சம் விழுங்குவ தன்றி
முத்தம் அயிறல் முப்பொழு திலையே!
வித்தும் வீசலின் விளைகொள் ளாதே! 10
அத்தகு விளைவும் அடிப்பற் றாதே!
எப்பொருள் மருங்கும் அப்புடைப் பயனே!
ஒடவிழ் செய்ய ஒளிதரு மணிப்போல்
தேடரு கல்வி வளனே செவ்விது!
ஆகலின் சான்றோ ரனப்பொதிந் தனரே! 15
ஓதுக ஓதுக; உன்னி ஓதுக
ஏதமிற் செல்வஞ் சேதமிற் காக்க
ஏமச் செப்புழை இடுதல் போன்றே
எய்ப்பின் வைப்பாய் இருத்தினர் பொருளே!
உய்யல் வேண்டுவர். ஊன்றிக் 20
கொய்யல் முறையே; கொடுக்கலு மாங்கே:

பொழிப்பு:

வானத்தே இருப்பதாயினும், மலையின் கண் இருப்பதாயினும், மீன்கள் வாழுதலில்லாத கடலின் ஆழத்தே இருப்பதாயினும் ஒரு பொருளை விரும்பியோர் தம் முயற்சியினால் அப் பொருளைக் கைக்கொள்வர். பொருளின் பயனை யறியாத முயற்சியற்ற மாக்கள் தம் அருகிலேயே இருப்பினும் அதனை அறியமாட்டார். இலையைக் கடித்துண்ணும் பசுமையான உடலையுடைய நீண்ட புழு பூவில் இருக்கும் நறுவிய தேனை அறியாததாய் இருக்கின்றது. மீன்வகை யெல்லாம் எச்சிலை விழங்குவதல்லாமல் முத்தினை உட்கொள்ளுதல் எக்காலத்தும் இல்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/398&oldid=1234685" இலிருந்து மீள்விக்கப்பட்டது