பக்கம்:நூறாசிரியம்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

49


11 பாகற் பகங்காய்


அன்பெனப் புகழ்கோ அருளென மகிழ்கோ!
என்கொல் பாகர்க் கிடுகறி யென்னா
அறிந்திசின் போதந்த ஏவலற் கெம்மனைப்
பாகற் பசுங்காய்ப் புளிக்குழை யட்டுத்
தாய்தர மிசைந்த தகவுரைத் தெங்கோ
அதுநயந் தருந்தா ராகலின் அதுமற்றுப்
பிறகொளக் கூறுகோ வென்றலு மவன்மீண்டுப்
பெய்துகத் தந்த திவக்காண்; முழுத்தும்
பைம்பருக் கொழும்புடை பாகல்;
ஐதகைக் கென்யான் நோற்ற வாறே!


பொழிப்பு:

(இந் நிகழ்ச்சியை) அன்பென்று புறத்தே புகழ்வேனோ ? அருளென அகத்தே மகிழ்வேனா என்ன வேண்டுங்கொல்? சமைக்கப் பெறும் நாட் குழம்பிற்கு இடுகின்ற கறி என என்பால் அறிந்து போக வந்த ஏவலனிடம், எம்மனையின் கண் பசிய பாகற்காயினைப் புளிக்குற்றிக் குழையாகச் சமைத்து, என் தாய் தர யான் விரும்பியுண்ட தன்மையைக் கூறி, என் தலைவன் அக்குழம்பினை விரும்பி அருந்தாராகலின், அப் பாகற்காய் தவிர (அவர் விரும்பும்) பிற யாதாயினும் வாங்கித் தரக் கூறுவாயாக என்று யான் கூறினேனாக அவன் அது கேட்டுப்போய், மீண்டும் வந்து யான் மகிழுமாறு கொட்டித் தந்தவற்றை இதோ, ஈங்குக் காண்பாயாக, முழுவதும் பசிய பருக்களை யுடைய கொழுவிப் புடைத்த பாகற்காய்களை (என் நலமே கருதும் என்) தலைவரின் பெருந்தகைமைக்கு யான் நோற்ற வகை என்னே !

விரிப்பு:

இப்பாடல் புறத்துறையைச் சார்ந்தது. என்னை? அகத்துப்படும் தலைவனின் அன்பைப் புறத்துப் புலப்படக் கூறினாளாயின் புறம் என்க.

தலைவன்மாட்டுக் கண்ட சிறந்ததோர் அன்பு நிகழ்ச்சியைத் தோழிக்குக் கூறி, அவன் தன்பால் கொண்ட பரிவை அன்பென்று புகழ்தல் தகுமோ, அருளென்று மகிழ்தல் தகுமோ? என்று வியந்தும் அத்தகையான இல்லறத் தலைவனாக அடையப் பெறற்கு யான் நோற்ற தவத்தின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/75&oldid=1181280" இலிருந்து மீள்விக்கப்பட்டது