பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேர்வு பெற்று மேல் வகுப்பிற்குச் சென்றுவிடுவது பள்ளி விதிக்கு ஏற்றது என்று பேசும் நிலையும் உள்ளது. இந்த நிலையில் நூலகம் செல்வதினும் இருந்த இடத்தில் இருந்து உருப்போட்டு ஒப்பிப்பதே தேர்வுக்குத் துணை செய்யும் என்ற எண்ணம் சிருர்களின் உள்ளத்தில் செம்மையாகப் பதிந்து விட்டதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை. இன்றையத் தமிழுக்கு வலிவும் பொலிவும் அமைத்துக் கடல்கொண்ட பூம்புகாரையும், இந்திய விடுதலைப்போரைத் தொடங்கிவைத்து இல்லாது மறைந்த கட்டபொம்மனின் கோட்டையையும் மீண்டும் உலகவர் கண்முன் கொண்டு வந்து நிறுத்திய நம் பசுந்தமிழ்க் கலைஞர், தமிழக முதல்வர், தமிழவேள், டாக்டர் மு. கருணநிதி அவர்களை நூலகக் கண் கொண்டு ஆசிரியர் ஏற்றவகையில் நம்மைக் காணச் செய் கின்ருர். இறுதியாக, ஆலுைம் இன்றியமையாததாக ஆசிரியர் இணைத்துள்ள ஆங்கிலத் தமிழ் நூலகவியற்சொற்பட்டி வளரும் தமிழிற்கு நல்லதொரு காணிக்கையாகத் திகழ் கின்றது. 'இனிவர இருக்கும் அடுத்த பதிப்பில் பாம்பியே (Pompeii) @@přGaviransluih (Herculaneum) .................. ஆகிய இரு நகரங்களும் கி. பி. 79-இல் வெசுவியஸ் (Vesuvins) என்ப வரால் தரைமட்டம் ஆக்கப்பட்டன" (பக்கம் 48) என்பதனை "வெசுவியஸ் என்னும் எரிமலையால் தரைமட்டம் ஆக்கப் பட்டன” எனத் திருத்தி வெளியிட்டுவிடலாம். - இதுபோன்று மேலும் பல பயனுள்ள நூற்களை ஆசிரியர் திரு. அ. திருமலைமுத்துசுவாமியிடமிருந்து நாடு எ தி ர் பார்க்கின்றது. 19–2–75 கொண்டல் சு. மகாதேவன்.