பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17. உயிர் . உடல் . நடை "பாட்டுக் கலைக்கு உயிர், உணர்ச்சிச் சிறப்பு; உடல், கற்பனை வளம்; உடை, ஒலிநயம். இப்பாட்டுக்களின் உடை. எளிமை சான்றது; உடல், அழகுற அமைந்தது; உயிரோ போற்றத்தக்க விருப்பம் உடையது. உயிரின் வாழ்வுக்காக உடலும், உடலின் காப்புக்காக உடையும் அமைதலாகிய இயற்கை அமைப்பை இப்பாட்டுக்களில் காணலாம். நுண்ணிதின் உணரும் செவிபுலன் வாய்ந்தவர்க்கே இவற்றில் உள்ள ஒலிநயம் புலனுகும்." -நற்றிணைச் செல்வம் 18. உரிமையும் கட்டுப்பாடும் "வீட்டிலே முழு உரிமை வேண்டும்; வெளியே ஒரளவு கட்டுப்பாடு வேண்டும்; இப்படி அமைந்தால்தான் மக்களின் வாழ்வு சீராக நடைபெற முடிகிறது. எங்கும் உரிமை என்ருல் பொதுவாழ்வு கெடுகின்றது. எங்கும் கட்டுப்பாடு என்ருலும் தனிவாழ்வு கெடுகின்றது. இன்ன இன்ன இடங் களில் உரிமை உண்டு என்றும், இன்ன இன்ன இடங்களில் கட்டுப்பாடு வேண்டும் என்றும் வரையறை இருந்தால், மனிதர் தனித்தனியே வளரவும் வாய்ப்பு உளதாகின்றது; பொதுவாகக் கூடி வாழவும் வழி ஏற்படுகின்றது.” -மொழியியற் கட்டுரைகள் 19. உலக அமைதிக்கு வழி “நாகரிகம் வளர வளர, கொலைக் கருவிகளில் சிறந்த முன்னேற்றங்கள் காணப்படுகின்றன. அதனால் போர் என்பது யாரோ சில வீரர்களைப் பொறுத்த நிகழ்ச்சியாக நிற்காமல், உலகம் முழுதும் பல ஆண்டுகள் அல்லல் படத் தக்க கொடுமைகளுக்கு வித்து ஆகிவிட்டது. "நாம் என்ன செய்ய முடியும்? வேறு வழி இல்லை' என்று ஒவ்வொருவரும் எண்ணுவதாலேயே இவ்வாறு பெருகும் கொடுமைகளைத் தடுக்க முடியாமல் வருந்த வேண்டியுள்ளது. "நாமும் மறை முகமாக இவற்றிற்குக் காரணமே; இவற்றைப் போக்க நாம் 102