பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னர் நூல்வரிசைப் பதிவெண்ணை, விலைச்சீட்டிலும் நூலின் தலைப்புப் பக்கத்தின் பின்புறத்திலும் நாம் குறிக்க வேண்டும். மேலும் அதனை நாள் சீட்டு, நூல் சீட்டு ஆகிய வற்றிலும் நாம் குறிக்கலாம். (உ) நூல்களைப் பொருள்வாரியாகப் பிரித்தல் : முதலில் நூல்களைப் பொருள் வாரியாகப் பிரித்து நூல் களுக்குரிய பொருட் குறியீடுகளை வழங்க வேண்டும். அதன் பின்னர் நூற்குறியீடுகளை வழங்க வேண்டும். பொருள்குறி யீடும் நூற்குறியீடும் சேர்ந்து வகைப்படுத்திய எண் எனப் படும். அதனை நூல் சீட்டிலும் நாள் சீட்டிலும் நூலின் தலைப்புப் பக்கத்தின் பின்புறத்திலும் குறிக்க வேண்டும். (ஊ) நூலக நூற்பட்டி தயாரித்தல் : அடுத்து ஆசிரியர் பெயர்ப் பதிவு, நூலின் தலைப்புப் பதிவு, நூலின் பொருட் பதிவு ஆகிய உயர் நிலைப்பள்ளி நூலக உறுப்பினர்களுக்குப் போதுமான மூன்று பதிவுகளைத் தயாரிக்க வேண்டும். (4) நூலக நூற்பட்டிக்குத் தயாரித்த பதிவுகளைத் தொகுத்து வைத்தல். (5) வீட்டிற்கு எடுத்துச் சென்று படித்தற் பொருட்டு மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நூல் வழங்கல். (6) நூல்களைப் பேணிக்காத்தல், சிதைவினைச் சரி செய்தல், பழுது பார்த்தல், நெருப்பு, நீர், நூல் திருடர், நூல் பூச்சிகள் ஆகிய நூல் பகைவரிடமிருந்து நூல்களைப் பாது. காத்தல். {7} நூற் கணக்கெடுப்பு: ஒவ்வொரு ஆண்டின் முடிவி லும் நூல்களைச் சரி பார்த்தல் வேண்டும். (8) பருவ வெயிடுகளைப் பயன்படச் செய்தல். 16i