பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. நூலகத்திற்கு வருகின்ற வாசகர்களை நூலகத்தில் இருக்கின்ற நூல்களிடத்து ஆற்றுப்படுத்தல்: நூலகத்திற்கு வருகின்ற வாசகர்களை இன்முகத்தோடு வரவேற்று, நூலகத்தின் பல பிரிவுகளுக்கும் அழைத்துச் சென்று. ஆங்காங்கு காணப்பெறுகின்ற அரிய செல்வங்களை அறிமுகப்படுத்தல். இதனல் நூலகத்திற்கு வருகின்ற வாசகர் கள் தாங்கள் வேண்டியவற்றை வேண்டியாங்கு, சி ர ம ம் இன்றி எளிதிற் பெறமுடியும். 3. பொது உதவி:, நூல்கள், பருவவெளியீடுகள், செய்தி அறிவிப்புவெளியீடுகள், அறிக்கைகள், ஒரு குறிப்பிட்ட பொருள் பற்றிய நூல்கள், ஆய்வு உதவு நூல்தொகுதிகள் ஆகியவை எங்கெங்கு உள்ளன என்று வினவுகின்ற வாசகர்களுக்கு உதவுதல். மேலும் சிலர் தங்களுக்கு உதவுதற்காக வேண்டி ஒரு சில நூலக அலுவல: களைப் பற்றியும் கே ட் க லா ம். அவ்வலுவலர்களைப் பற்றிக் கூறலும் ஆய்வு உதவு நூலகரின் பணியாகும். இப்பணி ஆய்வு உதவு நூலகர் ஆற்றவேண்டிய ஒரு தொடர் பணியாகும். எனவே அதனை அவர் அன்புடனும் பண்புடனும், நிதானத் தோடும் ஆற்றவேண்டும். 4. ஆய்வு உதவு நூல்கள், ஆய்வுமுறை பற்றி அறிவுரை வழங்கல்: பலவகைப்பட்ட ஆய்வு உதவு நூல் தொகுதிகளின் இயல்பு, பயன் ஆகியவற்றை எடுத்துக் கூறுவதோடு அவற்றை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது பற்றியும் கூறுதல். மேலும் ஆய்வு உதவு நூலகர் திறமை உடையவரெனின் ஆய்வு முறை பற்றியும் எடுத்துக் கூறலாம். * , 5. நூல் விவரத்தினைத் தேடித்தருதல்: ஒரு சிலர், நூலினது ஆசிரியர், அதனது வெளியீட்டாள விலை, அதுவெளியிடப்பட்ட ஆண்டு ஆகியவற்றைப்பற்றிக் கேட்பதோடு, சில ஆய்வு உதவு நூல்கள், பருவ வெளியீடுகன் 8