பக்கம்:நூலக அமைப்பியல்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 நூலகத்திற்கான இடத்தைத் தேர்ந்தெடுப்பதற்கு முன் பின்வருபவற்றைச் சிந்தித்தல் நலம். நினைத்த போது மக்கள் அந்த இடத்திற்கு வருமளவில் ஊருக்குள் அவ்விடம் இருக்கிறதா? அமைதியான சூழ்நிலை அங் குள்ளதா? அண்டையில் தொல்லைதரும் தொழிற்சாலை கள் ஏதும் உள்ளனவா? இயற்கை வெளிச்சம் எம் மருங்கினின்றும் வருகின்றதா? பிற்காலத்தில் நூல கத்தை விரிவுபடுத்த முயன்ருல் வேண்டிய இடம் இருக்குமா? தடையேதும் இருக்குமா? அடுத்துக் கட்டப் போவது, பொது நூலகமா, பல்கலைக்கழக நூலகமா, அறி வியல் நூலகமா என்பதைத் தெரிந்து கொண்டு அதற் கேற்பச் சிந்திக்க வேண்டும். ஒவ்வொரு நூலகத்திற்கும் அதன் தன்மையைப் பொறுத்தும் அதல்ை பயன்பெறு வோரைப் பொறுத்தும் திட்டம் தீட்டப்பட வேண்டும். பொது நூலகம்,_ஊரின் மக்கள் தொகை உயர உயரப் படிப்போரின் தொகையையும் அதிகம் பெறு: கிறது. உடனுதவும் நூலகப் பகுதியில் படிப்போரின் எண்ணிக்கை மிக மெதுவாக உயர்ந்தாலும், அது ஒரு நிலையான தேவைப்படும் பகுதியாக விளங்குததால், உடனுதவும் நூலகப் பகுதி நல்ல முறையில் கட்டப்பட வேண்டும். நூலகத்தின் நூல்களில் நான்கிலொரு பகுதி படிப்போர் இல்லங்களில் சுற்றிக் கொண்டிருக் வேண்டும். நகராண்மைக் கழகப் பொது நூலகங்களில் எந்தப் பகுதியைப் படிப்போர் மிகுதியும் விரும்புகின்ற னரோ அந்தப் பகுதியை நுழைவு வாயிலுக்கு அருகி லேயே வைத்திருத்தல் நன்று. இதல்ை கூட்டம் ஓரள விற்குத் தவிர்க்கப் படலாம். மாடியில்லாக் கட்டடங்களில், படிக்கும் அறை, செய்தித்தாள் பகுதி, நூல் வழங்கும் பகுதி முதலியன முன் நுழைவு வாயிற் கருகிலேயே அமைதல் நலம் பயக்கும். சிறுவர் பகுதியை, நூல்