பக்கம்:நூலக அமைப்பியல்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 கொள்ளும். இப்பொருத்தி, பல அளவுகளுள்ள இதழ் களைக் கொண்டிலங்கும்வகையில், பல பகுதிகளாய் பிரிக் கப்படவேண்டும். இதில் வைக்கப்பட்டுள்ள இதழ்கள் முன்நோக்கிக் கீழே விழுந்து விடாதபடி பகுதிகள் தடுப் புக்களுடன் விளங்கவேண்டும். ஒரு செய்தி இதழ் பொருத்தியின் சராசரி உயரம் 48” இருக்கலாம். அகல மும் ஆழமும் (Depth) முறையே 35", 14” ஆக இருக்க வேண்டும். நாளிதழ்கள் அதற்குரிய தாங்கிகளில் காணப்படும் கொம்புகளில் அல்லது குச்சிகளில் பொருத்தப்பட வேண்டும். படிப்போர் பார்க்கும் வண்ணம் நூலகத்திற்கு வரு கின்ற புத்தம் புதிய நூல்கள் அழகாகவும் ஒழுங்காகவும் அடுக்கி வைக்கப் வேண்டும் இரண்டு முதல் பத்துவரை கொள்ளக்கூடிய நூல் தாங்கிகளை இதற்காக வைக் கலாம். வேண்டாதபோது இதனை மடக்கி வைத்துக் கொள்ளலாம். இதுபோன்ற நூல் தாங்கிகளின் உயரம் 5த்”ழ், நீளம் 16'ம் இருக்கலாம்.