பக்கம்:நூலக ஆட்சி.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
1. நூலகப்பணி
-------------

நூல்களையும் அவைகளைப் பற்றிய முழு விளக்கங்களையும் வருவோர்க்கு வழங்குவதே நூலகத் தலைவர் வேலை. நூல்களையும் அரும்பெரும் கையெழுத்து ஏடுகளையும் காப்பவரே அவர். நூலகத்தில் செய்யப்படும் பணியின் முறையும் தன்மையும் இடத்திற்கேற்ப மாறிய போதிலும் அஃது ஒரு தன்மைத்தே. நூலக விதிகளுக்கேற்ப நூலகத் தலைவர் நூல்களைத் தொகை வகை விரி செய்து அமைக்கிறார். பின் அவைகளை வழங்குவதற்கேற்ற முறையிலே அமைக்கிறார். நூல்களையும் அவைகள் இருக்கும் அலமாரிகளையும் செப்பனிடல், ஆண்டுக்கொரு முறை அவைகளைச் சரிபார்த்தல், கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தாகிற முறையிலே நூல்களை அடுக்கி ஒழுங்குபடுத்தல் என்னும் அலுவல்களை அவர் மேற்பார்க்கின்றார்.

நூலகத் தலைவர் படிப்போர்களின் தேவைகளை அறிந்து அவர்கள் விரும்பும் நூல்களைத் தேர்ந்தெடுப்பதிலும், வாங்குவதிலும் துணையாக நிற்றல் வேண்டும். குறிப்பெடுப்பதிலும், மேற்கோள் நூற்பட்டியல் தயாரிப்பதிலும் படிப்போர்க்கும் ஆராய்ச்சியாளர்க்கும் அவர் அறிவுரை கூறலாம்.

நூலகத் தலைவருக்கு உதவி செய்யவே நூலக உதவியாளர்கள் அமர்த்தப்படுகின்றனர். பெரு நூலகங்களிலே குறிப்பெடுப்பதிலும், ஆராய்ச்சிபுரிதலிலும் படிப்போர்க்கு உதவிசெய்தல் இந்த உதவியாளர்கள் வேலையாகும். நூல் வழங்கல், புதுச் சீட்டுக்களை எழுதுதல், செய்தித் தாள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூலக_ஆட்சி.pdf/12&oldid=1111537" இலிருந்து மீள்விக்கப்பட்டது