பக்கம்:நூலக ஆட்சி.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இந்நூல்கள் பதிப்பகத்தார், விலை முதலியவற்றை அறிவதற்கும் விற்பனையாளருடைய விலைச்சீட்டைப் பரிசீலனை செய்வதற்கும் பயன்படும்.

மேலே சொல்லப்பட்டிருக்கும் மூலங்களும், துணை புரியும் நூல்களும் நூல் தேர்வுக்கு மிகவும் பயனுள்ளவையாகும். நூலகத்தார் இவைகளின் துணைகொண்டு சிறந்த நூல்களை வாங்க இயலும். ஊதியத்தையே நோக்கமாகக் கொண்டுள்ள சில பதிப்பகத்தார் தங்களது நூலிலே காணும் குறைபாடுகளை மறைத்துவிட்டு நூற் பட்டியலை வெளியிடலாம். இவ்வாறே சில செய்தி இதழ்களும் நூல் விமரிசனம் செய்யலாம், உண்மையினை உள்ளவாறே எழுதும் செய்தி இதழ்கள் ஒரு சிலவே. எனவே நூல் நிலையத் தலைவர் இத்தகைய சிறந்த செய்தி இதழ்கள் வெளியிடும் விமரிசனத்தை நன்கு படித்து அதன் பின்னரே ஒரு முடிவுக்கு வருதல் நன்மை பயப்பதாகும். மேலும் ஒரு குறிப்பிட்ட நூலைத் தேர்ந்தெடுக்குங்கால், கீழேத் தரப்படும் கருத்துக்களே மனத்தில் கொண்டு அதனைத் தேர்ந்தெடுத்தல் சாலச் சிறந்ததாகும்

1. நூலின் ஆசிரியர் யாரென்றும் அந்நூல் எவ்வளவு தூரம் அவ்வாசிரியரின் உயர்ந்த உள்ளக்கிடக்கையினை எடுத்துக் காட்டுகிறதென்றும் தெரிந்து கொள்ளுதல் வேண்டும்.

2. நூலானது ஆசிரியரின் எழுத்துத் திறமைக்கு எடுத்துக்காட்டாய் இலங்குகிறதா என்றும் கற்பனைத் திறனுக்கு ஆதாரமாய் இருக்கிறதா என்றும் அறிதல் வேண்டும். ஆசிரியர் தமது கருத்தை விளக்குங்கால் தெளிவுற உயர்ந்த நடையில் எழுதியுள்ளாரா அல்லது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூலக_ஆட்சி.pdf/24&oldid=1111757" இலிருந்து மீள்விக்கப்பட்டது