பக்கம்:நூலக ஆட்சி.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இல்லை. தற்கால உலகினைப்பற்றிய அறிவு, தற்கால உலக முன்னேற்றம், கண்டுபிடித்த பேருண்மைகள் என்பனவைகளைப் படிப்போர் பருகுமாறு செய்வதில் நூலகத் தலைவர்கள், வெளியீடுகளைப் பொறுக்குவதிலும், அவற்றைத் தொகுத்துக் காத்து அளிப்பதிலும் முழுக் கவனம் செலுத்த வேண்டும். உலகில் நடக்கும் எல்லா நிகழ்ச்சிகளைப் பற்றிய செய்திகளை அன்றாடம் தாங்கி வருவன நாளிதழ்களாகும்.

பருவ வெளியீடுகள் யாவும் ஒழுங்காக வரப்பெற்று நல்ல முறையிலே தொகுக்கப்பட வேண்டுமானால் என் செயல் வேண்டும்? ஒவ்வொரு வெளியீட்டுக்கும் ஒவ்வொரு குறிப்பு (record) இருத்தல் வேண்டும். அதிலே கீழ்வரும் விவரங்கள் காணப்படல் வேண்டும்.

1. பணம் செலுத்தியதற்கும் சந்தாவைப் புதிப்பித்தலுக்கும் கணக்கு வைத்தல்.

2. பருவ வெளியீட்டின் பகுதிகள் (issues) வரும் பொது அவ்வப்பொழுது வரவு வைத்தல்.

3. தலைப்புப் பக்கமும் (Title Page), முதற்குறிப்பும் (Index) வெளியிடப்பட்ட தேதி.

4. கிடைத்த விதம் (Source)

5. வெளிவரும் காலம்.

பருவ வெளியீடுகள் நூலகத்திற்கு வருங்கால் அவற்றைச் சரிபார்த்தல் வேண்டும். அதற்கு என்செயல் வேண்டும்? ஒவ்வொரு வெளியீட்டிற்கும் தனித்தனியாய் அட்டைகள் வைத்திருப்பது நலம். ஏனெனில் வெளியீடுகள் வரும்பொழுது அவைகளைச் சரிபார்ப்பதற்கு மிக-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூலக_ஆட்சி.pdf/34&oldid=1111767" இலிருந்து மீள்விக்கப்பட்டது