பக்கம்:நூலக ஆட்சி.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
7. நூலக ஆண்டறிக்கை
----------

ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் ஆண்டறிக்கை (Annual Report) தயாரித்தல் வேண்டும். ஆண்டறிக்கையானது அந்தந்த ஆண்டு நூலகத்தைப் பற்றிய செய்திகளைத் தொகுத்துத் தருவதாகும். ஆண்டறிக்கை தயாரிப்பதற்குப் பின்வரும் புள்ளி விவரங்கள் (Statistics) இன்றியமையாதன ஆகும்.

1. வரிசைப் பதிவு செய்யப்பட்ட நூல்களின் எண்ணிக்கை (Books accessioned) :

1. புதிதாக விலை கொடுத்து வாங்கப்பட்ட நூல்கள்
2. நன்கொடையாகக் கிடைத்த நூல்கள்
3. நூல் பரிமாற்றத்தின் மூலம் (exchange) வந்த நூல்கள்

2. வகைப்படுத்திய நூல்களின் எண்ணிக்கை - (Books classified) :

1. மத்திய நூலகத்தில் (Central Library)
2. பல துறை நூலகங்களில் (DepartmentalLibraries)

3. நூல் பட்டியல் தொகை எழுதப்பட்ட அட்டைகளின் (Catalogue cards) எண்ணிக்கை :

1. முதல் அட்டைகள் (Main Cards)
2. துணை அட்டைகள் (added entries)
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூலக_ஆட்சி.pdf/74&oldid=1123204" இலிருந்து மீள்விக்கப்பட்டது