பக்கம்:நூல் நிலையம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூ ல் நி லை ய ம்

1. தோற்றுவாய் !

அறிஞர் எமர்சன்

   'நூலகத்தில் உனக்குக் கிடைப்பன எவையென்பதை எண்ணிப் பார்! பல்லாயிரம் ஆண்டுகளாக விளங்கும் இப் பாரில் வாழ்க்கவருள் தலைசிறந்த அறிஞர், கவிஞர் தம் கல்வியின் பயனுக விழுமிய கருத்துக்களைச் சிறந்த முறையிலும் சீரிய ஒழுங்கிலும் தொகுத்த தொகுப்புக் களின் தொகுதி உன்னுடன் உறவாடக் காத்திருக் கின்றன. தம் உயிர்த் தோழர்களுக்குக்கூட அவர்கள் முற்றிலும் மனந்திறந்து சொல்லியிருக்க முடியாத உயரிய கருத்துக்கள் தெள்ளத் தெளிய வரையப்பட்டு ஏதோ ஒர் ஊழியில் வரும் என்னிடம் தரப்பட்டுள்ளன," என்ற அமெரிக்க அறிஞர்-எமர்சனின் பொன்மொழிகள் நூலகங்களின் பெருமையினை நன்கு எடுத்துக் காட்டும்.

“& Grfi" (Library)

     நூலகத்திற்குரிய ஆங்கிலச் சொல் லேப்ரெரி ஆகும்! "_j' என்ற லத்தீன் சொல்லின் அடியாகப் பிறந்தது தான் லேப்ரெரி. லிபர் என்ற வார்த்தை நூற்களின்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூல்_நிலையம்.pdf/10&oldid=1412587" இலிருந்து மீள்விக்கப்பட்டது