உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சின் நினைவுகள் 45

அவள் வாழ்கின்ற வாழ்வு தாகைத் தேடிக்கொண்ட வாழ்வன்று. பெற்றாேர் தேடித்தந்த வாழ்வுதான் என்றாலும் அவள் வாழ்வில் விதி விளையாடியது போலும்! எனவேதான் செல்வ மகளான அவள் வறுமை வாழ்க்கை வாழநேரிடுகின்றது. அவள் தன் வறுமை வாழ்வை கினேந்து கினைந்து நெஞ்சம் கோகின்றாள் பெற்ற தாய். பெண் படும் துன்பத்தைக் காணப் பொறுக்காத அவள் தன் வீட்டிலிருக்கும் செல்வத்தைக் கொண்டு தன் மகளின் வறுமையைப் போக்க முனைகின்றாள். தன்மானம் மிகுந்த மகளோ தன் தாய் வீட்டுச் செல்வத்தை ஏற்க மறுக்கின்றாள். அவள் மறுப்பில் பெற்ற தாயின் மனம் பெருமையால் பூரித்து கிற்கின்றது. என்றாலும் தன் மகள் தற்போது ஒருவேளை விட்டு ஒருவேளை உண்னும் நிலையை எண்ணிப் பார்க்கின்றாள். அவள் தன் உள்ளம் தன் மகள் தன்வீட்டில் செல்வாக்குடன் இருந்த நிலையை எண்ணி வாடுகின்றது.

பிரசங் கலந்த வெண்சுவைத் தீம்பால் விரிகதிர்ப் பொன்கலத்து ஒருகை ஏந்திப் புடைப்பின் சுற்றும் பூந்தலைச் சிறுகோல் உண்என்று ஒக்குபு புடைப்பத் தெண்ணீர் முத்தரிப் பொன்சிலம்பு ஒலிப்பத் தத்துற்று அணிகரைக் கூந்தல் செம்முது செவிலியர் பரிமெலிந்து ஒழியப் பந்தர் ஓடி ஏவல் மறுக்கும் சிறுவிளை யாட்டி அறிவும் ஒழுக்கமும் யாண்டுணர்ந் தனல்கொல் கொண்ட கொழுநன் குடிவறன் உற்றெனக் கொடுத்த தந்தை கொழுஞ்சோறு உள்ளாள் ஒழுகுநீர் நுணங்கறல் போலப் பொழுதுமறுத் துண்ணும் சிறுமது கையளே.

-ஈற்றிணை: 110