உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்ககால மன்னரும் மக்களும்

உலகின் பிற நாடுகள் பல நாகரிக உயர்வும் பண் பாட்டுச் சிறப்பும் பெற்று மிளிராத தொல்பழங்காலத் தில் தமிழ்நாடு தனக்கென ஒரு வாழ்வும் வழியும் கொண்டு துலங்கியது; கிரேக்க, யவனர்களோடு வாணிபத் தொடர்பு கொண்டு பொருளாதார மேம்பாடு உற்றிருந்தது. ஈரா யிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இலக்கியங்கள் பழங் தமிழர் தம் பீடுசால் பெருவாழ்வினை தனி விளக்குகின்றன. அவ்விலக்கியங்கள் சங்க இலக்கியங்கள்” எனப்படும். அவை உள்ளது புனேயும் நோக்கில் பாடப்படடுள்ள னவே அன்றி இல்லது புனையும் நோக்கில் எழுந்த இலக் கியங்கள் ஆகா. எனவே அவ்விலக்கியங்கள் காட்டும் மனித வாழ்வு சிறந்த பெற்றியும் செம்மைச் சிறப்பும் கொண்ட வாழ்வு எனக் கொள்ளலாம்.

இத்தகு சிறப்பு வாய்ந்த சங்க காலத்தில் மன்னரும் மக்களும் எவ்வாறு வாழ்வு நடாத்தினர் எனக் காண் போம். பல்வளமும் பாங்குறப் பெற்றிருந்த நாட்டிற்குக் காவலகை மன்னன் விளங்கின்ை. ஒரு நாடு எத்துணைத் தான் மாட்சி பொருந்தியதாக இருந்தாலும் வேந்தனில்லே யென்றால் சிறப்பெய்தாது.முதலாவது, தமிழ்நாடு வேளாண் மைத் தொழில்புரியும் காடு; வித்திட்டு விளைவு செய்து விளைபயல்ை வாழும் நாடு. உழவுத் தொழில் செய்து பயிர்