பக்கம்:நெஞ்சிற் பூத்தவை.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முந்திவரும் கூட்டுணர்வு மூண்டு வளர்ந்துவரக் கூடி மகிழ்ந்து குழுவாக வாழ்நெறியை நாடிக் குமுகாய நாட்டத்தைப் பெற்றிருந்தான், ஒட்டி உறவாடி உள்ளங் களித்ததனால் கட்டுப் படுத்திக் கனிவுதரும் அன்புணர்வு விட்டுத் தளிர்த்து விளைந்து பெருகியது; மட்டுப் படுத்தும் வகையறியா அம்மாந்தன் அன்பின் வலிமைதனை அன்பு தருந்தொடர்பை நன்கு தெளிந்தான் நாள்கள் வளர்ந்துவரக் காதலெனும் பாலுணர்வைக் கண்டு மிகமகிழ்ந்தான் ஆதி மனிதனவன் அன்பின் பயன்கண்டான்; பேசும் மொழியறிவைப் பெற்று வளர்ந்ததற்பின் மாசிலா நூல்கள் வகுக்கும் வகையறிந்தான்; சாதல்தரும் வீரத்தை ஆதல்தரும் காதலினை ஒதும் புறமென்றும் உள்ளும் அகமென்றும் கண்டான் கனிதமிழில் விண்டான் உலகதனிற் கொண்டான் பிறரறிந்து கொள்ளாப் - பெருமைஎலாம்; அவ்விரண்டு பண்பிற்கும் ஆன இலக்கணமும் செவ்விதிற் செப்பினான் சேர்த்து. (5—12–1963) கவியரசர் முடியாசன் D 29