பக்கம்:நெஞ்சிற் பூத்தவை.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழந்தமிழ்ப் பண்பா டெல்லாம் பாரினில் மீண்டுந் தோன்ற உழந்துழந் தோடித் தேடி ஒவ்வொன்றுங் கண்டு வந்து வழங்கிடும் வள்ளல்; வல்லார் வரைந்திடும் ஓவி யங்கள் தழைந்திடும் ஒவக் கூடம் தமிழர சென்னும் ஏடு! நெஞ்சினில் தமிழை வைத்தார் நெடுந்தொலை நாடு சென்று விஞ்சையின் மேன்மை கண்டு விளக்கிடும் பயண நூலாம்; எஞ்சலில் திறமை கொண்டார் எழுதிடுங் கதையின் பேழை; செஞ்சொலைச் சிதைக்கா வண்ணம் செந்தமிழ் எழுதும் ஏடு! கலைகளில் தோய்ந்த உள்ளம் காத்தலால் இந்த ஏடு பலவகைச் சிறப்பும் மேவிப் பயன்தரக் காணு கின்றோம்; உலகினில் அரசின் சார்பில் உலவிடும் இதழ்கட் கெல்லாம் தலையென உலகம் போற்றத் தமிழர சென்றும் வாழ்க! ('தமிழரசு ஐந்தாம் ஆண்டு மலருக்கு 3-6-1974) 32 0 நெஞ்சிற் பூத்தவை