உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு மணிக்கு மேலாகிவிட்டது. வீட்டிற்கு வரவேண்டும். ஸ்டுடியோவி லிருந்து ஒரு கார் மூலம் என்னை அனுப்ப திரு ஏ.எஸ்.எ. சாமி முயற்சி செய்தார். ஆனால் டிரைவர்கள் யாரும் இல்லை. ஸ்டுடியோவிலேயே படுத்துவிட்டுக் காலையில் போகலாம் என்று சொன்னார். காய்ச்சலோடு மனைவியை வீட்டிலே விட்டு விட்டு நான் எப்படி ஸ்டுடியோவில் தூங்க முடியும்? போய்த்தான் தீரவேண்டுமென்று புறப்பட்டேன். நல்ல இருட்டு. மழைத் தூறல் வேறு! அந்த இரண்டொரு மைல்களை நடந்தே கடக்க எண்ணி வீடு நோக்கிச் சென்று கொண்டிருந்தேன். அதற்கு முதல் நாள்தான் நான் செல்லும் வழியில் ஒரு பயங்கர மான அரசியல் கொலை நடைபெற்றது. ஒரு மைல் தூரம் ந.ந்திருப் பேன். இருமருங்கிலும் உள்ளப் புதர்க் காடுகளிலிருந்து ஐந்து, ஆறு நரிகள் ஒன்றாக வந்து சாலை நடுவே உட்கார்ந்து கொண்டன. எனக்குப் பின்னால் திரும்பி ஓடவும் முடியவில்லை; முன்னால் அடியெடுத்து வைக்க வும் முடியவில்லை! நரிகளிடம் சிக்கிக் கொண்டால் அவைகள் ஆளைச் சூழ்ந்து கொள்ளும் என்பதும் மண்ணை வாரி இறைத்து மனிதனை வீழ்த்தி விடும் என்பதும் வீழ்ந்த மனிதனை என்பதும் நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஒரு கணம் என்னை மறந்து நின்றேன். திடீரென ஓர் இராணுவ லாரி எதிரே வந்தது. அதன் பேரிரைச்சலிலும் விளக்கொளியிலும் நரிகள் மிரண்டு ஓடிப் புதருக் குள் புகுந்து கொண்டன. நான் அங்கெடுத்த ஓட்டம் சிங்காநல்லூரில் வீடு போய்த்தான் நின்றேன். அவைகள் என்ன செய்யும் மாலையில் என் கையால் அடிபட்ட மனைவி, வாசல் கதவைத் திறந்து வைத்துக்கொண்டு அந்தக் காரிருளில் என் வருகையை எதிர் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள். உடம்பெல்லாம் நெருப் பாகக் கொதித்தது அவளுக்கு. எனக்கு வீடு வாடகைக்கு அளித்த நண்பர் அண்ணாசாமியின் உதவியைக் கோரி மருத்துவ உதவி பெற்று மனைவியின் உயிரை அப்போது காப்பாற்றினேன். அந்தக் குருவிக் கூட்டினுள்ளே உட்கார்ந்து கொண்டு நான் எழுதிக் குவித்தவைகள் ஏராளம். 'அபிமன்யு' என்கிற புராணப் படத்திற்குப் புதுமையான வசனங்களை எழுதுகின்ற வாய்ப்பு எனக்குக் கிட்டியது. அந்தப் படம் வெளிவந்தபோது என் மனைவியையும் நண்பர் களையும் அழைத்துக் கொண்டு, திரையரங்கிற்குச் சென்றேன். ஆனால் அந்தப் படத்தில் நான் எழுத்துப் - பணியாற்றிய செய்தி திரையில் விளம்பரப்படுத்தப்படவே இல்லை!