உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 காந்தியார் கண்ட கனவை நனவாக்குகிறோம் பத்மாவை இழந்த நானும் என் குடும்பத்தாரும் அழுது கொண் டிருந்த அந்த 1948-ம் ஆண்டில்தான் உலகமே அழத்தக்க வண்ணம் உத்தமர் காந்தியாரைக் கோட்கேயெனும் கொடியவன் சுட்டுக் கொன்று விட்டான். இந்தியச் சுதந்திரத்திற்காக அரும்பாடு பட்ட காந்தியடிகளார். சுதந்திரம் பெற்ற மக்கள் அந்தச் சுதந்திரத்தை எவ்வாறு துய்த்திட வேண்டுமென்று நேரிடையாக அறிவுரை கூறுவதற்கு வாய்ப்பற்றுப் போயிற்று. வழக்கம்போல் பிரார்த்தனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட காந்தியடிகளைக் கொடியவன் கொடியவன் குறி பார்த்துச் சுட்டான். எந்த இதயத்தை இந்திய மக்களுக்காக ஒதுக்கி வைத்து இருந்தாரோ அதில் மூன்று குண்டுகள் பாய்ந்தன. அதே இடத்தில் சாய்ந்தார். சற்று நேரத்திற்கெல்லாம் அவர் உயிர் அமைதியாகப் பிரிந்தது. மாலையில் வானொலிகள் மூலம் இந்தத் திடுக்கிடும் செய்தியைக் கேட்ட உலக மக்கள் தேம்பித் தேம்பி அழுதனர். 'இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்குமி'ைடயே உண்மையான நட் பில்லை என்பதைத் தென்னாப்பிரிக்காவில் வெகு காலத்திற்கு முன்பே நான் தெரிந்து கொண்டேன். ஒற்றுமைக்குத் தடையாக இருப்பவை களைப் போக்குவதற்குக் கிடைக்கும் எந்த வாய்ப்பையும் நான் தவற விடுவதில்லை. முகஸ்துதியாகப் பேசியோ சுயமதிப்பிற்காகப் பாதக மான வகையில் நடந்தோ ஒருவரைச் சமாதானப்படுத்திக் கொண்டு விடுவது என்பது என் சுபாவத்திற்கு விரோதமானது. இந்து- முஸ்லிம் ஒற்றுமை. விஷயத்தில்தான் என்னுடைய அகிம்சை கடுமை யான சோதனைக்கு உள்ளாக நேருமென்பதை எனது தென்னாப்பிரிக்க அனுபவம் எனக்குத் தெளிவாகக் காட்டியிருந்தது' என்பதாகக் காந்தி யடிகள் தமது சுயசரிதையில் குறிப்பிட்டிருக்கிறார். அவர் குறிப்பிட்டது உண்மையாகவே ஆகிவிட்டது. அன்னிய ஆதிக்கத்தை எதிர்த்து அவர் எத்தனையோ போராட்டங் களை நடத்தினார். உண்ணாவிரதங்கள் இருந்து மரணத்தின் முகப்பு வரை சென்று மீண்டு வந்தார். வெள்ளையனின் துப்பாக்கி, பீரங்கி முனைகளுக்கு நேராக நின்று அவர் விடுதலைக் கொடியைக் கம்பீரமாக உயர்த்திய போதும் அவர் உயிருக்கு ஆபத்து நேரிடவில்லை. 108