உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமணத்திற்குத் தலைமை வகிப்பது யார் என்ற பிரச்னை எழுந்து விட்டது. இரண்டு சர்ச்சைக்குரியவர்களின் பெயர்கள் கூறப்பட்டு ஒவ்வொரு தரப்பிலும் பத்துப் பேர் வாதாடினார்கள். திடீரென நான் ஒலிபெருக்கியின் முன்னால் பேச ஆரம்பித்தேன்: "பெரியோர்களே! நண்பர்களே!- இந்தி எதிர்ப்பு அடையாள மறியலின் காரணமாக இந்த மணவிழாவுக்குத் தலைமை வகிக்க அண்ணா அவர்கள் வர இயல் வில்லை. இப்போது யார் தலைமை வகிப்பது என்பது பிரச்சினையாகி விட்டது. சங்க இலக்கியங்களில் காதல் தலைவன் - காதல் தலைவி என்றுதான் பார்த்திருக்கிறோம். ஆகவே இந்த மணவிழாவுக்கு நானும். என் மனைவியும்தான் தலைவனும், தலைவியும்! "இப்போது நாங்கள் மாலை மாற்றிக் கொள்கிறோம் என்று கூறிவிட்டுத் திருமணத்தை முடித்துக்கொண்டேன். பிறகு நானே தலைமை உரை யாற்றிவிட்டு, விழாவுக்கு வந்திருந்த நண்பர்கள், டி. கே. சீனிவாசன், கவி கா.மு.ஷெரீப் ஆகியோரையும் மற்றவர்களையும் வாழ்த்துக் கூறச் சொன்னேன். இப்படி ஒரு விதமாக என் திருமணம் முடிந்தது. திருமணம் முடிந்ததும், இந்தி எதிர்ப்புப் பிரச்சாரத்தில் தொடர்ந்து என் கவனம் சென்றது. அந்த ஆண்டு சென்னை செயின்ட் மேரீஸ் மண்டபத்தில் கட்டாய இந்தியை எதிர்த்து ஓர் எழுச்சி மிக்க கூட்டம் நடைபெற்றது. 1940-ம் ஆண்டு அளவில் மறைந்த இந்திக்கு, மீண்டும் தமிழ்நாட்டில் உயிருட்டக் காங்கிரஸ் அரசு முயன்றது. அந்த முயற்சியைக் கிள்ளி எறியத் தான் தமிழ்த் தலைவர்களின் பேரணி அமைந்தது. தமிழ்த் தென் றல் திரு.வி.க., பெரியார். அறிஞர் அண்ணா, சிலம்புச் செல்வர் ம.பொ.சி., புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், மறைமலை அடிகள் ஆகியோர் இந்தியை எதிர்த்துத் தமிழகம் திரண்டெழும் விதத்தில் வீர உரையாற்றினர். 1947-ஆகஸ்டு 15-ம் நாளினைத் துக்க நாளாகக் கொண்டாட வேண்டும் என்ற பெரியார் கருத்துக்கு எதிர்க் கருத்து வழங்கிய காரணத்தால், அண்ணா அவர்களுக்கும் பெரியார் அவர்களுக்கும் இடையே ஏற்பட்டிருந்த மனக்கசப்புக்கூட மெல்ல மெல்ல மாறத்தக்க அளவுக்கு இருவரும் இந்தி எதிர்ப்புப் போரில் ஒன்றுபட்டுப் பணி யாற்றத் தொடங்கினர். இந்தி எதிர்ப்பு வீரர்கள் மீது குடந்தை மாநகரில் அடக்கு முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. தெருக்களில் குருதி ஆறு பெருக் கெடுத்தது. மீண்டும் சிறைச்சாலை, சித்திரவதை, இந்தியை எதிர்த்துக் கழகத்தினர் பெறுகிற பரிசாக ஆயிற்று! 116