உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யில் போய் இறங்கினோம். என்னுடன் வந்து கொண்டிருந்த அவர் கொஞ்சம் பின் தங்கினார். திரும்பிப் பார்த்தேன். என்னருகே வந்து கொண்டிருந்தார். நெற்றியைக் கவனித்தேன். விபூதியும் இல்லை; குங்குமமும் இல்லை. வெறும் நெற்றிதான் இருந்தது! (இப்போது மீண்டும் அணிந்து கொள்வதைச் சில நேரங்களில் பார்த்திருக்கிறேன். பொள்ளாச்சிக் கூட்டத்தில் தானும் பேச வேண்டும் என்றார். கொஞ்ச நாட்கள் பொறுத்திருந்து பேசலாம் என்று நான் தடுத்துப் பார்த்தேன். அவரோ பேசத் துடித்தார். சரியென்று ஒப்புக் கொண்டேன். 'அஸ்பினும் ஆர்வம் உடைமை' என்பதுபோல அன்பிலிருந்து பிறந்த அவரது ஆர்வத்தை அதிக நேரம் என்னால் தடுக்க முடியவில்லை. அவருடைய பேச்சின் முதல் வாசகமே, "வட்டிக்கு வட்டி வாங்கும் செட்டிமார் நாட்டில் பிறந்தவன் நான்" என்பது ஆகும். ஓர் ஐந்து நிமிட நேரம் பேசி முடித்தார். கழக முத்திரை அழுத்தமாகக் குத்தப்பட்டு விட்டதாக அவர் உணர்ந்தார். நானும் மகிழ்ந்தேன். பிறகு இருவரும் சேலத்தில் இருந்தவாறு கழகக் கூட்டங்களுக்குச் செல்வதை வாடிக்கையாகக் கொண்டோம். - இதற்கிடையிலேதான் அவர் கழகத்தில் முழுமையாகச் சேருவதற்கு முன்புதான்- சென்னையில் திராவிட முன்னேற்றக் கழகம் தோன்ற வேண்டிய சூழ்நிலை உருவாகியது. நானும் அவரும் சென்னையில் முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்ட நாள் அன்று சென்னைக்குச் சென்றிருந்தோம். அதற்கு மறுநாள் திருவாரூரிலிருந்து என் தாயும், மனைவியும் சேலத்திற்குக் குடிவருவதற்கு ஏற்பாடுகள் ஆகியிருந்தன. சென்னை நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு மறுநாளே சேலம் திரும்பி, அம்மாவையும் மளைவியையும் சேலத்தில் சந்திக்க வேண்டும். வாடகைக்குப் பார்த்து இருந்த வீட்டில் குடி போக வேண்டும் என்ற. திட்டத்துடன் என் சென்னைப் பயணத்தை நான் ஏற்பாடு செய்திருந்தேன். ce ex