உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைவாணர் கவலைப்படவில்லை. அந்த எதிர்ப்புக்களைச் சிரித்துச் சிரித்துச் சமாளித்துக் கொண்டார். ஈனத்தனமாக எதிர்ப்புக்கள் வரும்போதும், மறைமுகமான தாக்குதல்கள் வரும்போதும் அண்ணா காட்டிய மௌனமும், கலைவாணர் காட்டிய சிரிப்பும் இன்றைக்கும் என்னால் மறக்க முடியாதவைகளாகும். அத்தகைய எதிர்ப்புக்கள் என்னை நோக்கி வருகிற நேரத்தில் நான் அண்ணாவையும் கலைவாணரையும்தான் எண்ணிக் கொள்கிறேன். ஒரு கொலை வழக்கில் கலைவாணரும், எம். கே. தியாகராச பாகவதரும் சம்பந்தப்பட்டுக் கைது செய்யப்பட்டார்கள். அப்போது பாகவதர் கண் கலங்கினார். கலைவாணர் சிரித்துக் கொண்டே சிறை. புகுந்தார். அந்தக் கலையுலக மாமணிகளின் விடுதலைக்காகப் பெரியாரும், அண்ணாவும் பெரும் பாடுபட்டார்கள். தமிழகமே அவர்கள் இருவரது விடுதலைக்காகக் குரல் ஒலித்தது. இறுதியில் வழக்கறிஞர் ஏத்திராஜ். அவர்களின் வாதத் திறமையோடு நீதி ஆண்டு வென்றது. கலைவாணரும், பாகவதரும் இரண்டு சிறைவாசத்திற்குப் பிறகு வெளிவந்தார்கள். தன் விடுதலைக்காகப் பாடுபட்ட தலைவர்களையும், கழக நண்பர்களையும் கடைசியாகக் கண் மூடும் வரையில் மறக்கவே ந ல்லை. "எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம், உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு காலச் கலைவாணர் என்ற திருக்குறளின் உண்மைப் பொருளுணர்ந்து நடந்து காட்டிய அந்தப் பெருமகன் எனக்குச் சிறு இடர் வந்தாலும் அது தனக்கு வந்தது போல் துடிதுடிப்பார். ஒரு நாள் எனக்குக் காய்ச்சல் என்று கேள்விப்பட்டுச் சென்னையில் தியாகராயநகரில் குடியிருந்த என்னைப் பார்ப்பதற்காக வந்தார். அவருடன் கலையுலக நண்பர்கள் சிலரும் வந்தார்கள். எப்பொழு தாவது நாங்கள் பொழுது போக்கிற்காகச் சீட்டு விளையாடுவது உண்டு. சோர்ந்து படுத்திருந்த என்னைப் பார்த்துக் கலைவாணர், கொஞ்ச நேரம் சீட்டு விளையாடலாம் என்று அழைத்தார். நான் மறுத்தேன். "அப்போதுதான் உடம்பு சுகமாகும்; எழுந்து உட்காருங்கள்” என்று என்னை எழுப்பி உட்கார வைத்தார். வந்தவர்கள் தலைக்கு ஆயிரம் ரூபாய் வைத்துக் கொண்டு சீட்டு விளையாட ஆயத்தமாய் இருந்தார்கள். நானோ நூறு ரூபாய் வைத்துக் கொண்டு சீட்டு விளையாட ஆயத்தமானேன். பணம் குறைவாகத் தான் இருக்கிறது என்று கலைவாணரிடம் சொன்னேன். “பரவாயில்லை. வேண்டுமானால் நான் தருகிறேன்" என்று தைரியப்படுத்தினார். 145