உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுச்சிக்கும் வித்திட்ட வைர் மணிவிளக்காம் தியாகராயப் பெரியாரின் பெயரால் அமைந்த தியாகராயர் கல்லூரியின் நிதிக்காகத்தான் நாடகம். 'பரப்பிரம்மம்' நாடகம் ஏராளமான வசூல். நானும் சிவாஜி கணேசன் அவர்களும் நடித்தோம். இரவு நாடகத்தை முடித்து விட்டு மறு நாள் திருச்சி சுற்றுப் பயணத்தைத் துவக்க வேண்டிய முக்கியத்துவம் கருதி ஆகாய வழியைத் தேர்ந்தெடுத்தோம். விமானப் பிரயாணி.கள் எதை 67605 எண்ணிக்கொண்டிருந் தார்களோ தெது; நானும் சத்தியும் மேலிருந்தபடியே பூமியை நோக்கினோம். பச்சைப் பட் ஈடை உடுத்திய தமிழகத் திருமாதா, தன் நதிக் கரங்களால் உழவர் பெருமக்களைச் சீராட்டிப் பாராட்டிக் கொண்டிருந்தாள். கம்பீரமான தோற்றம்; கனிவு நிறைந கண்கள்; கருணை பொழியும் வதனம்; எழிலாடும் எங்கள் தாய்க்கு அணிகலன் களாக இருந்தன பக்கத்திலே ஒரு பாவையும், அகம் அழுவதை முகத்தால் காட்டிக் கொண்டிருந்தாள். விமானப் பிரயாணிகளை உபசரிக்கும் பொறுப்பு வாய்ந்த அலுவலில் ஈடுபட்டிருக்கும் அந்த இள நங்கை ஏனிப்படி வாட்டமாயிருக்கிறாள் என்பது முதலில் புரியத்தானில்லை. விபத்துக்களைப் பற்றி எண்ணம் வராமல் கண்ணியமான புன்னகை காட்டி, பவ்யமாகப் பத்திரிகைகளை நீட்டி, பழ ரசும் தந்து, பணி சில புரிந்து பாதுகாத்திட வேண்டிய பதவியிலுள்ள அந்தப் பாவை. ஏனிப்படித் துன்பக் கேணியில் தள்ளப்பட்டிருக்கிறாள் என்ற கேள்விக் கணைகள் என்னை விட அதிகமாக என் நண்பர் சத்தியையே துளைத்தெடுத்தன என்ன சார் விஷயம்?" என்று அவருக்கே இயல்பான துடிப்பு நிறைந்த சொற்களால் என்னைக் கேட்டார். கேட்டுக் கொண்டேயிருந் தார். பிறகு அவரே காரணத்தை எனக்கு விளக்கிடும் அளவுக்குத் தெளிவும் பெற்றார். அவளது சிவந்த கரங்களிலே சில கடிதங்கள் இருந்தன. நான் கடிதமென்று சொல்லுகிறேன். அதை அவள் பொற் சுரங்கமென் ாளோ; புதையல் எடுத்த தனமென்பாளோ; நானறியேன். ஏனெனில், அவைகள் அவள் காதலனின் கடிதங்கள். எங்கேயோ தூரத்தில் இருக்க வேண்டும் அந்தத் துடியிடையாளைத் துணைவியாகப் பெற்றிடத் துடித்தவன். அவன்தான் இப்போது அவளிடம் அந்தப் பழைய ஒலைகளின் மூலம் பேசிக் கொண்டிருக்கிறான். நினைவு எத்தனை இன்பமான வேதனை அளிக்கக்கூடியது? அதற்கு அவள் மட்டும் விதி விலக்கா? அவள் கையிலே பழைய கடிதங்கள் நெஞ்சிலே புதிய புதையல்கள். 182