உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எம். எஸ். சிவசாமி, கே. வி. கே. சாமி முதலிய எண்பதுக்கு மேற்பட்ட தோழர்களும் சதி வழக்கில் சம்பந்தப்படுத்தப்பட வேண்டும் என்ற திட்டத்தோடு கைது செய்யப்பட்டார்கள். சென்னையிலே மறியல் நடத்துவதற்காகச் சென்ற ஐம்பதுக்கு மேற்பட்ட தோழர்களும், அந்த அணிவகுப்புக்குத் தலைமையேற்று நடத்திய திருமதி சத்தியவாணிமுத்து அம்மையாரும், காஞ்சி ராசகோபாலும் ஜூலை 14ஆம் தேதியன்று கைது செய்யப்பட்டார்கள். 15ஆம் தேதி மறியல் போராட்டத்திற்குத் தலைமை வகித்த வேதாசலம் முதலிய ஐம்பதுக்கு மேற்பட்ட தோழர்களும் கைது செய்யப்பட்டார்கள் சென்னையிலே! 16ஆம் நாள்- ஆயிரம் இடர் அடுக்கிவரினும் அசையாத மன உறுதி படைத்தவரும். வடாற்காடு மாவட்டத்தில் கட்சிக்கோர் படை போன்றவருமான போளூர் சுப்பிரமணியம் தலைமையில் ஐம்பதுக்கு மேற்பட்ட நண்பர்கள் கைது செய்யப்பட்டனர். சிறை நிரம்புகிறது- நிரம்பி வழிகிறது என்ற செய்திகள் செவி நிரம்ப- சிந்தையிலே துடிப்பு நிரம்ப-நாங்கள் காவலுக்கிடையே அமர்ந்திருந்தோம். மணிக்கு டி. எஸ்.பி. 16ஆம் தேதி காலை 10 மணிக்கு எங்களை யெல்லாம் உடனே சொல்லிவிட்டுப் போனார். வந்தார். அரியலூருக்கு அனுப்பும்படி பிற்பகல் 12 மணிக்குப் போலீசார் செலவில் சாப்பாடு போடப்பட்டது. நாங்கள் கடைசியாக இலை போட்டுச் சாப் பிட்ட சாப்பாடு அது தான்! சாப்பாடு முடிந்தது-போலீஸ் வண்டி வந்து நின்றது. எல்லோரும் அதில் ஏறி அமர்ந்தோம் வண்டி அரியலூர் நோக்கிப் புறப்பட்டது. ஆம். எங்களுடைய சிறை யாத்திரை துவங்கிவிட்டது. 6