உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லாம். அவர் இயற்றிய பாடல்கள் உண்மையின் படப்பிடிப்பாகவும், யாருக்கும் அஞ்சாமல் கருத்துக்களை வெளியிடுபவைகளாகவும் இருந்தன. குத்தகைக்கார அய்யர் என்று ஒரு பெரும் பண்ணைக்காரர் திருக்குவளை யில் இருந்தாராம். அவரிடத்திலே அனைவரும் அஞ்சி நடுங்கிக் கிடந்த காலம்; அப்போது ஒரு பாட்டு எழுந்தது ஏழைகளின் குரலாக, " இந்தக் கொடுமை செய்தால் ஏழைகள் என்ன செய்வோம்? இனிப் பொறுக்க மாட்டோம் ஈட்டியாய் வேலாய் மாறிடுவோம் 93 என்ற வரிகளைத் தொடக்கமாக வைத்து அந்தச் சீமானைக் கண்டிக்கும் பாடல் எழுதி உரத்த குரலில் எடுத்துப் பாடினார். அந்த ஊரே பாடிற்றாம்; குத்தகைக்காரர் கொட்டம் கொஞ்சம் கொஞ்சமாக அடங்கிற்றாம். பெரிய குடும்பத்துப் பெண்ணொருத்தி நெறி தவறிவிட்டாள். பல நாயகர்களைக் கூடிக் கிடந் தாள். வேதனை தாங்காமல் அவள் கணவன் மடாலயத்தில் தம்பிரானாகச் சேர்ந்துவிட்டார். பெரிய இடத்து பெண்ணின் காமச் சேட்டைகள் அதிகமாயின. ஊரிலே உள்ள பெரும் புள்ளிகள் பலர் அவள் வலையில் விழுந்தனர். அதைக் கண்டிக்க வேண்டும். எதிர்க்க வேண்டும் என்ற நல்ல உள்ளம் பெற்றார் என் தந்தை. அவரது உறவினர்கள் பலர் அவரால் கண்டிக்கப்பட வேண்டி யவர்களானார்கள். நெறி தவறியவர்களும் முத்துவேல் புலவரால் தாக்கப்பட்டனர். அப்பட்டமான உண்மையை அணுவும் மறைக்காமல் எழுதினார் ஒரு பாட்டு, 'ஏலேலோ' என்கிற மெட்டிலே! அதில் சில வரிகளை மட்டும் குறிப்பிட விரும்புகிறேன். அந்த மங்கை தன் மண வாளனைப் பார்த்துப் பாடுவது போல் எழுதப்பட்ட கவிதை இது: 06 அண்டை வீட்டுக்காரர்கள் கண்டால்தான் என்ன? அபச்சாரம் புரிந்தேன்னு சொன்னால்தான் என்ன? மண்டல முழுவதும் தெரிந்தால்தான் என்ன? மரியாதை மானங்கள் போனால்தான் என்ன? தாயாரின் பேச்சுக் கேட்டுத் தாலியைக் கட்டித் தட்டாரைச் சிநேகித்து அவரோடு விட்டீர்! பெண்களே தெய்வமென் றெண்ணியே கெட்டீர் தகாத பண்புகள் பழக்கமும் பெற்றீர்-"