உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொலைக் குற்றத்தில் ஈடுபட்டு ஆயுள் தண்டனை பெற்ற கான்விக்ட் வார்டர்கள் சிறைச்சாலைக்குள்ளேயே மற்றவர்களோடு மிகவும் நன்றாகப் பழகுகிறார்கள். திருந்தி நடக்க வேண்டும் என்ற ஆசையோடு காலக் தைக் கழிக்கிறார்கள். குடிவெறியில் கொலை செய்தவர்கள் - கற்பு தவறிய மனைவியைக் கொலை செய்தவர்கள் - பங்காளிகளைக் கொலை செய்தவர்கள் - நிலத் தகராறுகளால் கொலைச் செயலில் ஈடுபட்டவர்கள் - எதிரிகள் கொடுத்த தொல்லையால் கொலை வெறிக்குத் தூண்டிவிடப்பட்டவர்கள்- ஆகியவர் களைத்தான் அதிகமாகக் காண முடிகிறது சிறைச்சாலைகளில். இருபது ஆண்டு சாதாரணமானதா? இளைஞனாக இருந்தால் வனப் பும் வசீகரமும் நிரைந்த வாலிபம் சிறைச்சாலையிலேயே முடிந்து விடு கிறது. நாற்பது வயதிற்கு மேற்பட்ட மனிதனாகத்தான் அவளை வெளியே பிரசவிக்கிறது சிறைச்சாலை. வாலிபத்தைக் கடந்த நிலையிலே உள்ளவன் ஆயுள் தண்டனை பெற்றால், வாழ்வின் சுகத்தை இனிமேல் அனுபவிக்க முடியாது என்ற பருவத்திலே சக்கை மனிதனாக அவனைச் சிறைச்சாலை வெளியே உமிழ் கிறது! ஆயுள் தண்டனையை விட மரணதண்டனை எவ்வளவோ மேல்தான்! ஆனால் ஆயுள் தண்டனை பெற்ற கைதிகள் வெளியில் வந்த பிறகு புதிய மனிதர்களாக மாறிக் கொலை வெறியைத் தடுக்கும் கொள்கைக் காகப் பாடுபட்டார்களேயானால், ஒரு கொலையால் வந்த பழியைப் பல உயிர்களைக் காப்பாற்றுவதன் மூலம் போக்கிக் கொள்ளலாம். அதை விட்டு வெளியில் வந்ததும், "என்னிடம் யாரும் வாலாட்டக் கூடாது. நான் கொலை கேசில் ஜெயிலுக்குப் போனவனாக்கும்!" என்று மீசையை முறுக்கித் தோளைத் தட்டிக்கொண்டு நின்றால், அது வீரமுமாகாது: விவேகமுமாகாது. கோழைத்தனத்தின் கூக்குரலாகவே கருதப்படும்.