உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆந்திர அரசு துவக்க நாளிலே மகிழ்ச்சி ஆரவாரத்துடனே தலைவர்கள் பேசுகிறார்கள். பிரதமர் நேரு பண்டிதர் பேசுகிறார். சென்னை முதல்வர் ராஜாஜி பேசுகிறார். ஆந்திரப் பிரகாசம் பேசுகிறார். ஆந்திர ராஜ்யத்தைத் துவக்கி வைத்துவிட்டுச் சென்னை, கோவை மதுரை, மாமல்லபுரம், பவானி முதலிய இடங்களிலே சுற்றுப் பயணம் நடத்தினார் பண்டித நேரு. தமிழகத்தின் தலைவர்கள் சிறையிலே! ஐயாயிரவர் அடக்குமுறைக்கு ஆளாயினர்! பிணங்கள் வீழ்ந்தன! சதி வழக்குகள் கிளம்பின! இந்த நிலைமையிலே கொதித்துப் போயிருந்த மக்கள், தங்கள் அதிருப்தியைக் காட்ட நேருவுக்கு எல்லா இடங்களிலும் சுறுப்புக்கொடி காட்டினர். .அவரது பொதுவாழ்விலே அதுவரையில் காணாத எதிர்ப்பை அவர் கண்டார். கறுப்புக் கொடி காட்டுவது ஒரு வகை; நேருவுக்கும் தெரியாததல்ல. தமிழரை 'நான் சென்ஸ்' என்று இருமுறை இகழ்ந்தார். ஒரு முறை மன்னித்தோம். பெரிய மனிதர் என்பதற்காக; மீண்டும் சொன்னார். மதுரையிலே நேருவுக்குக் கறுப்புக் கொடி காட்டிய கிளர்ச்சியில் தோழர் முத்து, மற்றும் பல தோழர்கள் கைது செய்யப்பட்டார்கள். சென்னையிலும் முப்பது பேருக்கு மேல் கைதாயினர். சென்னையிலே கண்ணபிரான், பார்த்தசாரதி மற்றும் பலர் தடியடிக்காளாயினர். செங்கற்பட்டிலே அண்ணாமலை தலைமையிலே கருங்கொடி நிகழ்ச்சி வெற்றி கண்டது. சென்று நாள்தோறும் நமது தோழர்கள் சில றச்சாலைக்குச் கொண்டிருப்பதும், நாடெங்கும் கிளர்ச்சித் தீ கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருப்பதும் தேனினுமினிய செய்திகளாக எங்களுக்குக் கிடைத்துக் கொண்டேயிருந்தன. எல்லோரும் போய்விட்ட காரணத்தால், மிச்சமிருந்த ஐம்பதுக்குட் பட்ட தோழர்களை ராம சுப்பையா அவர்கள் வசம் ஒப்படைத்துவிட்டு நான் சிறிது ஓய்வு பெற்றேன். பேச்சு மன்றமும் கிடையாது. 243