உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிறகு அவர் ஆணைக்குக் கட்டுப்பட்டு நடப்பதும், அந்தத் தலைமையை மதிப்பதும்தான் கட்சிக் கட்டுப்பாட்டை வளர்க்கும். அப்படித் தலைமைக்கு மதிப்பளித்து நடக்கும் பழக்கத்தை நான் என். அரசியல் வாழ்க்கையில் பல ஆண்டுகளாக மேற்கொண்டிருக்கிறேன்!" என்று அண்ணா பெருந்தன்மையுடன் குறிப்பிட்டது, உள்ளத்தில் பசுமையாக இருக்கிறது. அந்த மாநாட்டில் அண்ணா அவர்கள் நாட்டு மக்களைப் பார்த்து ஒரு புதிய கேள்வியை எழுப்பினார். ஏழு ஆண்டு காலக் குழந்தையாக இருக்கிற இந்தக் கழகம் பொதுத் தேர்தலில் போட்டியிடலாமா? வேண்டாமா? என்று பொதுமக்களே தீர்ப்பளிக்க வேண்டுமென்று கூறிப் போட்டியிடலாம், அல்லது போட்டியிட வேண்டாம் என்ற தீர்ப்பை வாக்குச் சீட்டுகளின் மூலம் மாநாட்டிற்கு வந்த பொதுமக்கள் அளிக்க வேண்டும் என்பது அண்ணாவின் 'கருத்தாகும். அந்தக் கருத்தின் அடிப்படையில் மாநாட்டுப் பந்தலைச் சுற்றி பல்வேறு வாக்குச் சாவடிகள் திறக்கப்பட்டன. இரண்டு பெட்டிகள் நுழை வாயிலருகே வைக்கப்பட்டன. தேர்தலில் போட்டியிடலாம் என்பதற்கு ஒரு பெட்டியும். தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்ப தற்கு ஒரு பெட்டியும் இடம் பெற்றன. மாநாட்டிற்கு வந்திருந்த பொதுமக்கள் தங்கள் எண்ணங்களை வாக்குச் சீட்டின் மூலம் தெரிவித் தனர். குறிப்பிட்ட நாளில் மாநாட்டு மேடையில் வாக்குச் சீட்டுகள் எண்ணப்பட்டன. சில ஆயிரம் பேர்தான் கழகம் பொதுத் தேர்தலில் ஈடுபட வேண்டாம் என்று வலியுறுத்தி "வாக்களித்திருந்தனர். இலட் 'சத்திற்கு மேற்பட்டோர் கழகம் பொதுத் தேர்தலில் ஈடுபட வேண்டும் என்று வாக்களித்திருந்தனர். ஜனநாயகத் தேர்தலில் ஈடுபடுவதா வேண்டாமா என்று கருத்தறிய ஒரு ஜனநாயகத் தேர்தலை நடத்திய அண்ணா அவர்கள், அந்த மாநாட் டில் 1957 பொதுத் தேர்தலில் காங்கிரசை எதிர்த்துக் கழகம் போட்டி யிடும் என்று வரலாற்றுச் சிறப்பு மிக்க முடிவை அறிவித்தார்கள். புதிய முறுக்கோடு கழகத் தலைவர்களும், செயல் வீரர்களும், தொண் டர்களும், மாநாட்டிலிருந்து கலைந்து சென்றார்கள். மலைமுகட்டில் பெய்த பெருமழை பேராறுகளாக ஆகி, அந்தப் பேராறுகள் சிற்றாறுகள் ஆகி, சிற்றாறுகள் வாய்க்கால்கள் வழியோடி, வயல் வெளிகளில் நீர்வளம் ஏற்படுத்தி, பயிர் செழிக்கச் செய்வது போல், மாநாட்டு மக்கள் பெருவெள்ளம், மாநாடு முடிந்து பட்டி தொட்டிகளுக்கெல்லாம் சென்று திருச்சி மாநாடு தந்த உணர்வினை மற்றவர்களுக்கு எடுத்துரைத்துக் கழகத்திற்குப் புதிய வலிவினைச் சேர்க்கத் தொடங்கியது. 276.