உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குளித்தலைத் தொகுதியில் அண்ணா அவர்களின் கட்டளைக் கேற்பவும், ஜனநரயகக் கடமையாற்றவும், நான் போட்டியிட ஆயத் தமானபோது, என்னுடைய வளர்ச்சியில் ஒரு முக்கியமான கட்டத்தை அடைந்ததாகவே கருதினேன். அதுவரையில் நாள் அரசியல் விழிப்பு உணர்வினைப் பரப்புகின்ற தொண்டனாகவே கருதிக்கொண்டிருந்த நிலை மாறி, ஆட்சி மன்ற அரசியல் வாதியாக உருவெடுக்கத் தொடங்கி னேன் என்பது முக்கியமான கட்டமல்லவா? அந்த கட்டம் எனக்கும் என் போன்ற மற்றக் கழகத் தோழர்களுக்கும் எத்தகைய சங்கடத்தைக் கொடுத்தது என்பதை இப்போது நினைத்தாலும் சிரிப்பு வருகிறது! "என் தாய்த் தமிழைக் காப்பாற்ற என்னோடு தோள் கொடுத்துக் கஷ்ட நஷ்டமேற்க முன் வாருங்கள்". "ஏமாந்த காலத்தில் ஏற்றங்கண்டு விட்ட ஒரு பகுதியின் ஆணவ ஆதிக்கத்தை முறியடிக்க எனக்கும், என் இயக்கத்திற்கும் ஆதரவு தாருங்கள்." "இல்லாமை-போதாமை-வறுமைகளை பின்னால் அணிவகுத்து நில்லுங்கள்.” இல்லாதொழிக்க என் "சாதியின் பேரால், சமயத்தின் பேரால் நாம் சாய்ந்து போன நிலையை எண்ணி ஒவ்வொருவரும் வெட்கப்படுங்கள். துக்கப்படுங்கள்." - என்றெல்லாம் நாள்தோறும் பல மணி நேரம் ஆயிரக்கணக்கான மக்களிடையே அறிஞர் அண்ணா அவர்களின் அரவணைப்பின் உறுதி யோடு கொட்டி முழங்கியே இயக்கப் பணியாற்றிக் கொண்டிருந்த என் போன்ற கழகத் தோழர்களுக்கு ஒவ்வொரு வாக்காளரிடமும், "நான் தேர்தலில் நிற்கிறேன், உங்கள் வாக்கை எனக்கே அளியுங்கள்" என்று கேட்டுக்கொண்டு தேர்தல் பணியாற்றியது, ஒரு வகைச் சங்கட மாகவும் புது வகை அனுபவமாகவும் இருந்தது! அறிஞர் அண்ணா அவர்கள் நாள்தோறும் முழக்கி வந்த சொற் பொழிவுகளும், தாம் தேர்தலில் போட்டுயிடுவது ஏன்? எதற்காக? என்கின்றவைகளுக்கு அளித்த விளக்கங்களும் நாளடைவில் என்சங்கட உணர்வுக்குச் சற்று ஆறுதல் அளித்தன. சுருங்கச் சொல்லப் போனால், காமராசரின் அறைகூவல் அரசியலும், அதன் காரணமாக அண்ணா அவர்களுக்கு ஏற்பட்ட சலிப்புமே எங்களைத் தேர்தல் களத்தில் நிறுத்தின. தேர்தலில் வெற்றி பெற்று எதைச் சாதிக்கப் போகிறோம் என்பது எங்களில் பலருக்கு வியப்புக் குறியாகவே இருந்தது. ஏனென்றால், தமிழ்நாட்டு அரசியல் பீடம் டெல்லிக்குத் தபால் பெட்டி அந்தஸ்துடன் 279