உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழக வேட்பாளர்கள் வெற்றிபெற்ற இடங்களில் முடிவுகளை அறிவிப்பதில் அசாதாரணத் தயக்கம் காட்டப்பட்டது. அது ஏன் என் பதற்கு விடை கிடைக்கவே இல்லை. 1957 தேர்தலில் நடைபெற்ற மற்றொரு விசேஷம் கம்யூனிஸ்டுகள் நடந்து கொண்ட முறையாகும். காங்கிரசுக்கே வாக்களியுங்கள்; ஆனால் கழகம் வெற்றி பெற வழி விடாதீர்" என்பதுதான் அவர்களுடைய லட்சியமாக இருந்தது. காஞ்சியிலும், சேலத்திலும் கம்யூனிஸ்டுகள் நடந்து கொண்ட முறை அவர்கள் போற்றும் கொள்கைகளுக்கே உகந்ததுதானா என்பதைப் பரிசீலனை செய்து பார்க்கும் நிலையில் அப்போது அவர்கள் இல்லை. இந்த இரு இடங்களில் கம்யூனிஸ்டுகள் ஜாமீன் தொகை கூட இழந்தார்கள் என்பதும் முக்கியமானதாகும். நான் போட்டியிட்ட 1957-ஆம் ஆண்டுத் தேர்தலில் குளித்தலையில் மொத்தம் ஏழு வேட்பாளர்கள் போட்டியிட்டோம். நான் 22, 785 வாக் குகளும், என்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் திரு கே. தர்மலிங்கம் 14, 489 வாக்குகளும் பெற்றோம். குளித்தலையில் செல்லாத வாக்குகள் நான்குதான்; இதிலிருந்தே தேர்தல் பணிகளைக் கழகத் தோழர்களும் மற்றக் கட்சியினரும் எப்படிச் செய்திருக்கிறார்கள் என்பது புலனாகும். பின்தங்கிய பகுதியான குளித் தலைத் தொகுதியில் மொத்தம் பதிவான 48, 163 வாக்குகளில் செல்லா தவை நானகுதான் என்றால், ஒவ்வொரு வாக்கும் எத்தகைய பொறுப் புணர்வோடும் பெருமதிப்போடும் சேகரிக்கப்பட்டிருக்கின்றது என்பதும், தோழர்களின் செயலாற்றலும் நன்கு வெளிப்பட்டன. என் தொகுதியிலும் அப்போது கம்யூனிஸ்டுகள் தமது கைவரி சையைக் காட்டாமலில்லை. திரு எஸ். சண்முகம் என்ற சுயேச்சையை ஆதரித்துக் கம்யூனிஸ்டுகள் கழகத்தின் மீதும், என்மீதும் சுமத்திய அபாண்டங்கள் கொஞ்சமல்ல. ஆயினும், காஞ்சி, சேலம் போலவே குளித்தலையிலும் கம்யூனிஸ்ட் சார்பு வேட்பாளர் ஜாமீன் பறிகொடுத்தார். குளித்தலைத் தொகுதியில் மற்றுமோர் அதிசயம் நிகழ்ந்தது. தண்ணீர்பள்ளி என்ற கிராமத்தின் வாக்குச் சாவடியில் உதயசூரியனுக்குத் தவிர, மற்ற எந்தச் சின்னத் திற்கும் ஒரு வாக்குகூடப் போடப்படவில்லை! இது ஓர் அகில இந்திய

  • ரிக்கார்ட்' என்று பேசப்பட்டது. மேலும் எனக்கு அளிக்கப்பட்ட

வாக்குகள் 22,785-ல் ஏறக்குறைய 12,580 வாக்குகள் தாய்க்குலம் வழங் கிய வாக்குகள்தாம். இது ஒரு தனிச் சிறப்பு என்பதாக அப்போது பேசப்பட்டது. 206