உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேதனையாக இருந்தது. அறிஞர் அண்ணா அவர்களே கூடச் சில நேரங்களில் கம்யூனிஸ்டுகளைப் பற்றிக் கடுமையாகப் பேசியிருக்கிறார் என்றால். அப்போதைய கம்யூனிஸ்டுகள் தமிழகத்தைப் பற்றிச் செய்த பிரச்சாரத்தின் தன்மையைத் தெரிந்து கொள்ளலாம். “கம்யூனிஸ்டுகளின் தாறுமாறான பிரச்சாரத்திற்குத் தி.மு.கழகத் தோழர்கள் பதிலளிப்பதோ, எழுதுவதோ தேவையில்லை. மாலங்கோவ் பிரதமராக இருந்தபோது சொன்னேன். தி.மு. கழகந்தான் உண்மை யான கம்யூனிஸ்டுக் கட்சி என்று; நம்முடைய கொள்கைகளுக்கு விரைவிலேயே கம்யூனிஸ்டுகள் வரவிருக்கிறார்கள். கேரளத்தில் பதவி ஏற்றுக்கொண்ட காரணத்தால். "துவக்கத்திலேயே அங்கு (கோளத்தில்) மத்திய யதேச்சாதிகாரம் குறுக்கிடுகிறது. நிலைமை நீடிக்க - நெருக்கடி முற்றி- அமைச்சர் பதவியை விட்டு வெளியேறி-இந்திய அரசியல் சட்டத்தை அவர்கள் எதிர்க்கத்தான் போகிறார்கள். "கம்யூனிஸ்டுகள் தப்புக் கணக்குப் போட்டுப் போட்டுப் பின்னர் திருந்திக் கொள்வது அவர்களின் தலைசிறந்த கொள்கைகளிலே ஒன்றாக இருப்பதால், சீக்கிரத்தில் உண்மை நிலை உணர்ந்து திருந்துமாறு அவர்களை வேண்டுகிறேன்” என்று 24-4-57 அன்று பொன்மலையில் நடைபெற்ற பாராட்டுக் கூட்டத்தில் தெரிவித்தார். அண்ணா. அறிஞர் அண்ணா அவர்களின் கணிப்பைப் போலவே, கேரளத்தில் கம்யூனிஸ்டு அமைச்சரவையின் நிர்வாகத்தில் மத்திய சாக்கார் நடந்து கொண்ட முறையும், கம்யூனிஸ்டுகள் அமைச்சரவை கவிழ்ந்ததும், கம்யூனிஸ்டுகள் அவசியமற்ற மாயையிலிருந்து விடுபட்டதும் அனைவரும் அறிந்த உண்மை. இதனை இப்போது குறிப்பிடுவதற்குக் காரணம், சமீப நாட்களாகத் தமிழகத்துக் கம்யூனிஸ்டுகளின் சிந்தனையும் 1957-க்குத் தாவியிருப்பது போல், அவர்களுடைய பேச்சும் கொஞ்சம் மாறியிருப்பதுவே காரண மாகும். கழகத்தைக் கேலி பேசிய காங்கிரசாரும், கம்யூனிஸ்டுகளும் பின்னர் அதற்காக வருத்தப்படும் அளவுக்குத் தமிழகத்தின் சட்ட மன்றப் பணிகள் சிறப்பாக அமைந்தன. கழகம் எதிர்க்கட்சியாகப் பொறுப்பேற்றதும், சட்ட மன்றத்தில் எத்தனை பண்புகள், மரபுகள் உருவாகும் என்பது முதன் முதலாக அவைத்தலைவர் டாக்டர் கிருஷ்ணாராவ் அவர்களைப் பாராட்டி 30-4-57-ல் அறிஞர் அண்ணா உதிர்த்த பொன் மொழிகளிலிருந்து வெளிப்பட்டது. ஆம்; அன்று அண்ணா அவர்கள் பேசிய பேச்சின் ஒவ்வொரு வார்த்தையும் விலை 302 தட