உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1967-ல் கழகம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதும் சிலரால் கிளப்பப் பட்டது என்பதை நினைக்கும் போது, கழகத்தைக் காட்டிலும் அதன் பெயரை மறையச் செய்வதில் பலருக்குப் பெரு விருப்பு இருப்பது புலனாயிற்று. இந்தப் பெயர் மாற்றப் பேச்சுக்கள் அடிபடும் போதெல் லாம், எனக்கு அந்தக் காலத்துச் சமுதாய சீர்திருத்த மாநாடுகளின் பேச்சுக்களும், அந்தப் பேச்சுக்களுக்குத் தேர்ந்தெடுத்துக் கொண்ட மாவீரர்களின் பெயர் வரிசையும் நினைவுக்கு வரும். பிரான்ஸ் நாட்டுப் பெரும் பிரபு ரோஹன் என்பவர் கொடுத்த விருந்தொன்றில் எப்படியோ இடம் கிடைத்துக் கலந்து கொண்ட இளைஞன் வால்டேர், சுற்றியிருந்தோரிடம் சளசளத்துக் கொண்டிருந் தானாம். இதைக் கவனித்த ரோஹன் பிரபு, 'யார் இந்த இளைஞன்? இப்படிக் கூவிக் கொண்டிருக்கிறான்?" என்று கேட்டாராம். வால்டேர் தானே முன் வந்து சுடச் சுடப் பதிலளித்தானாம். 'பெரும் அதற்கு பட்டமோ, பரம்பரைப் பெருமைப் பின்னணியோ கொண்டவனல்ல நான்.ஆனால் எனக்கிருக்கும் சாதாரணப் பெயரே எல்லா விதப்பெருமை களையும் உணர்ந்த மரியாதைகளையும் எனக்குக் கொண்டு வந்து சேர்க்கும் என்று நம்புகிறவன் நான். என்னுடைய பெயர் வால்டேர்." பிரான்ஸ் நாட்டுப் பெரும் பிரபுவை நோக்கிச் சாதாரண வால்டேர் இப்படிச் சொன்னது இராஜ துரோகத்துக்கு ஈடானதாக எடுத்துக் கொள்ளப் பட்டதாம். தன் பெயரை வால்டேர் தெரிவித்த முறை அங்கு இராஜத் துரோகமாக அதிகார ஆணவம் போல், இங்கு கழகத்தின் பெயரே தேச துரோகமானது என்று கருதியது ஆணவ அரசியல்வாதிகள் புலம்பிக் கொண்டிருந்தனர். தனது சாதாரணப் பெயரினாலேயே உலகத்தார் பெருமைகளை சம்பாதித்துக் கொள்ளும் தன்னம்பிக்கை படைத்திருந்த வால்டேரைப் ஒருசேர போல், தன் இயக்கத்தின் சாதாரணப் பெயரிலேயே இந்நாட்டு ஜன நாயகத்தில் தன்னுடைய மகோன்னத முத்திரையைப் பதித்து விடும் தன்னம்பிக்கையோடு நாங்கள் சட்ட மன்றத்தில் ஈடு மக்கள் மன்றத்தில் சுழன்று பணியாற்றினோம். கொடுத்தோம். 306