உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிணக்கும் செய்துகொண்டிருந்தனர். இது அந்தத் தொகுதியில் நான் தேர்தலுக்கு நிற்பதற்கு முன்பிருந்தே புகைந்துகொண்டிருந்தது. ராஜாஜி முதலமைச்சராக இருந்த காலத்தில், ஆலோசிக்கப்பட்டு, காமராசர் காலத்தில் முதன் முதலாக முதலமைச்சராக விளங்கிய காலத்தில் நிறைவேற்றப்பட்ட 'நியாய வார' சட்டத்தில் காணப்பட்ட சில ஓட்டை களைப் பயன்படுத்தி ஓட்டைகளைப் நிலச்சுவான்தாரர்கள் ஆட்டம் போட்டனர். பரம்பரையாகத் தங்களிடத்தில் குத்தகைதாரர்களாகவும் கூலிகளாகவும் இருந்துவந்தவர்களை நிலத்தில் அடி வைக்காமல் செய்தும், வேறு ஊர்களிலிருந்து குறைந்த கூலிக்கு ஆட்களைக் கொணர்ந்து நேரடியாகச் சாகுபடி செய்தும் தகராறுக்கு வித்திட்டனர். நாட் அதற்கேற்றாற்போல் நான் தேர்ந்தெடுக்கப்பட்ட சில களுக்கெல்லாம் அங்குள்ள நிலச்சுவான்தாரர்கள் செய்தது சரியென்ற மாதிரியிலும் உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டுவிட்டது. அறுவடையான நெல் மணிக் கதிர்கள் களத்து மேட்டிலேயே குவிந்து கிடந்தன. நிலச்சுவான்தாரர்கள் சட்டத்தின் மூலமாகவே தாங்கள் செய்தது நியாயம் என்பது உறுதிப்பட்டுவிட்ட திருப்தியில் உறுமிக் கொண்டிருந்தனர். களத்துமேட்டில் நெல் மணிக்குவியல்களையும், தங்கள் வீட்டில் புகையாத அடுப்புகளையும் தங்கள் மனைவி. மக்களுடைய ஒட்டிப் போன வயிறுகளையும் பார்த்துப் பார்த்து விவசாயப் பாட்டாளி மக்கள் குமுறிக்கொண்டிருந்தனர். அந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் இதனைத் தீர்த்து வைப்பது என்னுடைய பொறுப்பாக இருந்தது. அதுவரையில் அமைச்சர்களிடமும் அதிகாரிகளிடமும் நான் செய்த முயற்சி எதுவும் பலனளிக்காமல் போயின. அன்று கவர்னர் உரையின் பேரில் நான் விவாதத்தில் கலந்து கொள்வதற்கு வாய்ப்புக் கிடைத்தபோது, மற்ற எல்லாவற்றையும் விட நங்கவரம் விவசாயிகள் பிரச்சினைதான் எனக்கு நினைவில் நின்றது. அன்று நான் முதன் முதலில் பேசிய பேச்சு விவசாயிகளின் அவல நிலையையும், நிலம் படைத்தோரின் மனிதாபிமானமற்ற போக்கு களையும் படம் பிடித்துக் காட்டுவதாக அமைந்தது. இது பின்னர், நான் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற காலத்தில் தீவிரமாகச் செய்து முடிக்கும் நிலச் சீர்திருத்தப் பிரச்சினைக்கு முன்னுரையாம். வரலாற்றுப் போக்குப்படி தொடக்கப் பணியாய் அமைந்திருப்பதை இப்போது நினைத்தால் எனக்குப் பெருமையாக இருக்கிறது. மாவீரன் லெனின், தனது அண்ணன் அலெக்சாண்டர் 1887-ல் ஜார் மன்னன் ஆணைப்படி தூக்கிலிடப்பட்டபோது, பதினேழு வயதான லெனின், "இதற்குப் பதிலாக ஜார் மன்னனைப் பழிவாங்கியே 308