உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உரிய இடத்தைக் கண்டு பிடித்த திருப்தியில், அறிஞர் அண்ணா அவர்களின் அன்றையப் பேச்சை மிக ஆவலோடு கேட்டோம். ஆயிரம் முறை அறிஞர் அண்ணா அவர்கள் பேசுவதைக் கேட்டிருக்கும் எனக்கு, அன்றையப் பேச்சு புது வேகத்தையும், உற்சாகத்தையும் கொடுத்தது. ஏனென்றால், அவர் அன்று பேசிய பேச்சு அப்படிப்பட்டது; அவர் பேசிய இடம் அப்படிப்பட்டது. தேசிங்கு "செஞ்சிக் கோட்டைமீது ஏறியவர்கள் எல்லாம் ராஜாக்களா?" என்று முதன் முதலாகக் காங்கிரஸ் அமைச்சர்களின் முகத்துக்கு நேராகக் கேட்டார். அவர் தொடர்ந்தார்: "அதேபோலக் காங்கிரசில்' இருப்பவர்கள் எல்லாரும் பெரும் தியாகிகள் அல்ல. இதனை மறந்து எங்களை, 'இவர்களெல்லாம் ஏகாதிபத்திய தாசர்கள்' என்று பேசுவதனால், எங்களுடைய முகம் அல்ல - அந்தப் பக்கத்தில் (காங்கிரஸ் பக்கம்) உட்கார்ந்திருக்கிற பலருடைய முகம் சுருங்குவதை நான் காண்கிறேன். இவ்வாறு கூறியதும் நான் சட்டமன்றத்தில் காங்கிரஸ் உறுப்பினர்கள் பக்கம் பார்த்தேன். அறிஞர் அண்ணா அவர்கள் பேச்சுக்களை அருகிலிருந்து அவர்கள் கேட்பதும், அந்தப் பேரறி ஞருடைய 'தாக்குதல்'களை நேருக்கு நேராக அனுபவிப்பதும் எனக்குப் புது அனுபவமாகத் தோன்றியது. காமராசர் அவர்கள் சிலைபோல் இருந்தார். சுப்பிரமணியம் அவர்கள் லேசாகச் சிரித்துக்கொண்டார். பக்தவத்சலம் அவர்கள் முகத்தில் கோபம் பொங்கிற்று. மற்ற அமைச்சர்களின் முகங்களைப் பார்க்க எனக்குத் தோன்ற வில்லை. "காங்கிரஸ்காரர்கள் தங்களின் பழம் பெருமைகளைப் பேசிப் பயனில்லை. ஜமீந்தார்கள், சிற்றரசுகள் காலம் வேகமாக ஓடி 315