உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குவளை செல்லும் வழியிலே போய்க் வழியிலே போய்க் கொண்டிருக்கிறேன். தோழர்களுடன் காரில்! "இதோ இந்த ஊர் தான் கச்சணம்! திருவாரூரில் படிக்கும் போது இந்த ஊரில்தான் பஸ்ஸில் இறங்குவேன்! இங்கிருந்து நாலைந்து மைல் நடந்து கிராமத்துக்குச் செல்வேன் தினந்தோறுமல்ல! விடுமுறை நாட்களில்! கச்சணத்துக் காப்பி ஓட்டலில் ஓரணாவுக்கோ, இரண்டணாவுக்கோ காராபூந்தி வாங்கித் தின்று கொண்டே போனால் கனியே வழி நடந்து செல்லும் சிரமம் தெரியாது. "சில சமயம் இரவு நேரங்களில் தனியே நடந்து செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டுவிடும். நெஞ்சிலே திக்திக்கென்று பயம் பீரிட்டுக் கிளம்பும். வழிநடைக்கு என் தகப்பனாரும், அவரது நண்பரான சரவண சாமியார் என்ற பெரியவரும் எனக்கு ஒரு மந்திரம் சொல்லிக் கொடுத்தார்கள். 'சிவாய நம! ஓம் நம சிவாய!" இதை முணு முணுத்துக் கொண்டே நடப்பேன். பேய் பிசாசுகள் அருகே வராதாம். அந்த மந்திரத்தைக் கேட்டால்! என் இளம் உள்ளத்திலே அந்த நம்பிக்கை வேரூன்றி இருந்தது! இப்போதுதான் அந்த வேரே கெல்லி எறியப் பட்டுவிட்டதே! "இதோ இதுதான் காருகுடி! இங்கிருந்து ஒரு மைல் தொலைவு தான் எங்களூர்! எங்கள் வீட்டுக்குத் தயிர் வாங்க இந்த ஊருக்குத்தான் வரவேண்டும். கையிலே ஒரு ஈயச் செம்புடன் நானும் இரண்டொரு தோழர்களும் சேர்ந்து காலையிலேயே ஏழு மணிக்கு இந்த ஊருக்கு வருவோம். ஒன்பது, பத்து மணிக்குத் தயிரோடு வீடுவந்து சேருவோம். இடையில் தாகம் ஏற்பட்டால் தயிரைச் சிறிது குடித்துக் கொள்வோம். குறைவை நிவர்த்தி செய்து கொள்ளத்தான் கிராமங்களில் குளங்கள் ஏராளமாக உண்டே! "இதோ மரங்களடர்ந்த இடம். ஒரு காலத்தில் இந்த இடத்தைக் கண்டு எப்படிப் பயப்படுவோம் தெரியுமா? 'பட்டாணி' என்ற துஷ்ட தேவதையின் கோயில் அதற்குள்ளே இருக்கிறது. அந்தத் தேவதை இரவு நேரத்தில். தன் படைகளோடு தீவட்டி ஊர்வலமாக வயல்வெளி கனில் போகுமாம். அந்தக் காட்சியை நேரில் பார்த்ததாகவே பலர் கூறுவார்கள், அவர்கள் பார்த்த தீவட்டி வெளிச்சங்கள் என்னவோ உண்மைதான். ஆனால் வயல் வெடிப்புகளில் தோன்றும் ஒருவிதமான கந்தக வாயுவிலிருந்து கிளம்பும் தீச்சுடர்களின் வரிசைதான் அந்தப் பட்டாணி தேவதையின் தீவட்டி ஊர்வலம் என்பதை அவர்கள் அப் போது எப்படி அறிவார்கள்? இப்போதுகூட இந்த விளக்கத்தை ஏற்றுக் கொள்ளப் பலர் தயாராயில்லையே! நாள் கூட அப்போதெல்லாம் நம்பித்தான் நடுங்கிக் கொண்டிருந்தேன். 'நமசிவாய' மந்திர உதவியோடுதான் இந்தப் பகுதிகளைக் கடந்து செல்வேன். அப்படிப் 29