உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/365

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73 பகைமைத் தீயும் பண்புப் புனலும் ன்று என்னைப் கனன்று கொண்டிருந்த கழகப் பிளவாளர்கள் உள்ளத்தில் அண்ணா எனக்குக் கணையாழி அளித்த நிகழ்ச்சி பற்றிய கண்டனக் கணைகளைக் கழகத் தோழர்கள் மத்தியில் எழுப்புவதற்கு எரிச்சல் களங்களை உருவாக்கிற்று. அது எதுவரையில் போய் நின்றது, என்னைப் பற்றி எந்த அளவிற்குத் தவறான பிரச்சாரங்கள் செய்தனர் என்பதையெல்லாம் இன்றைக்கு நினைத்தால்கூட என் நெஞ்சம் 'பகீர்' என்கின்றது. விபத்தின் காரணமாக என் இடது கண்ணில் அடிபட்டு நீண்ட நாள் சிகிச்சைக்குப் பிறகு நலமுற்றிருந்தேன் என்றாலும் என்னுடைய சுற்றுப் பயணங்களின்போது சிறிய கார்களைப் பயன்படுத்துவது நல்ல தல்ல என்றும், பெரிய கார்களில் செல்வதால் பிரயாணத்தின்போது ஏற்படுகின்ற அதிர்ச்சியிலிருந்தும் விடுபடலாம் என்றும், ஆகவே கண்ணின் நலம் வேண்டி சற்றுப் பெரிய காரைப் பயன்படுத்துமாறும் டாக்டர்கள் எனக்கு எச்சரிக்கை செய்து வலியுறுத்தியிருந்தார்கள். அதன் காரணமாக 1960-ல் நான் ஒரு பெரிய கார் படத்திற்கான நேரிட்டது. கலையுலகத்தில் திரைப் எழுதித் தருவதன் மூலம் கிடைத்த வாங்க உரையாடல் வருமானத்தில் தான் அந்தக் காரை வாங்கினேன். கழகத்திலேயே இருந்த என்னுடைய எதிர்ப்பாளர்கள் அந்தக் காரில் நான் பிரயாணம் செய்வது பற்றித் மனிதாபிமானமற்ற விமரிசனங்களைக் தங்களுடைய தோழர்களிடத்தில் ஆங்காங்கு செய்யத் தொடங்கினார்கள். கழகத்தின் அதில் என்னிடம் மிக நெருங்கிப் பழகி வந்த நண்பர் சம்பத் அவர்களே முதலிடம் வகித்துப் பிரச்சாரம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். என் காரைக் ஆனால் அவரும் அவரைப் போன்றவர்களும் காட்டி நான் எளிமையாக வாழத் தெரியாதவன் என்று செய்த தவறான கொண்டார்களா பிரச்சாரத்தைக் கழகத் தொண்டர்கள் ஏற்றுக் என்றால் இல்லை. அவர்களுடைய பிரச்சாரம் எந்த அளவுக்கு மக்களையோ சகோதரத் தொண்டர்களையோ மாற்றியமைக்கக் கூடிய சக்தி பெற்றிருக்கிறது