உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/367

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஓய்வெடுக்க வேண்டுகிறேன். பத்திரிகைகளில் தாங்கள் பல நிகழ்ச்சி களில் கலந்து கொள்வதைப் பார்க்கும்போது கண்ணீர் வடிக்கிறேன்," திருச்சி மாவட்டம் ஜெயங்கொண்ட சோழபுரத்தைச் சேர்ந்த வட்டச் செயற்குழு உறுப்பினரும், கழகப் பேச்சாளருமான வெற்றி கொண்டான் என்னும் நண்பர் எழுதியுள்ள மடலில் பின்வருமாறு குறிப்பிடுகிறார். என்ற "எங்கிருந்தாலும் இறைவன் என்னை இரட்சிப்பான் இலட்சியத்தோடு தொழுது நிற்கும் பக்தனைப் போல உள்ள நான் இக் குறிப்பை அனுப்பியுள்ளேன். சட்டப் பேரவையில் எதிர் முகாமில் இருப்போர் தங்களைப் பார்த்துக் 'குளிர் சாதனம் பொருந்திய கார் உமக்கு ஏன்?' என்று கேள்வி எழுப்புவதைக் கண்டு நான் அதிர்ச்சி யடைந்து விட்டேன். தந்தையாக அண்ணனும், தாயாக நீங்களும் எங்களுக்குக் கிடைத்தீர்கள். உங்கள் இருவரையும் உணர்ச்சி பொங்க வாழ்க, வாழ்க என முழங்கி தூர மாக நின்று கண்டு கண்டு மகிழ்ந்து கிடந்தோம். காலனுக்குப் பொறுக்கவில்லை. தந்தையை இழந்தோம், தாயின் கதகதப்பில் இன்று வாழ்கிறோம். அந்தத் தாயையும் இழந்து விட்டு அனாதைகளாய்ச் சித்தம் கலங்கிப் பித்துப் பிடித்து அலையத்தான் பிறந்தோமா? தாயின் ஆரோக்கியத்தில் ஒரு துளி பாதித்தாலும் அதைத் தாங்கிக் கொள்ளும் சக்தியை இனி எங்கே பெறுவோம்? தாயின் அருமை பிள்ளைக்குத் தெரியும்! இதயம் உள்ளோருக்குத் தெரியும்; பிறருக்கு என்ன தெரியும்! அவர்களும் கேள்வி கேட்கும் உரியைக்கு உரிய அந்தக் கார் இருப்பதால் தானே கேட்கிறார்கள்? அவர்களுக்குக் கேள்வி கேட்கும் உரிமை வழங்கும் அந்தக் கார் வேண்டாம். எங்களின் தெய்வத்திற்கு நாங்கள் கோயில் கட்டிக் கொள்கிறோம். எங்களின் நெற்றி வியர்வையால் பெற்ற சொத்துக்களை விற்றாவது தருகிறோம். உங்களுக்கு உதவாத ஒன்று. ஒரு சொத்து எங்களுக்கு ஏன்? மண்டியிட்டு வேண்டுவதெல்லாம் மறுத்து விடாதீர்கள் விடாதீர்கள் என்பதே யாகும். எங்களின் கண்ணீரைத் துடைத்திடும் பொற்கரங்களைப் பெற்று நிற்கும் தங்களின் தம்பிமார் களின் இந்த வேண்டுகோளை இதயம் கனிந்து ஏற்றுக்கொள்ளுங்கள்." பொதுக்குழு அடுத்து கழிஞ்சூரைச் சேர்ந்த பொதுக்குழு உறுப்பினர் மு.கோதண்டன் அவர்கள் தீட்டியுள்ள மடலில், உங்களுக்குக் கண் வலி என்றால் எனக்கு நெஞ்சு வலி ஏற்படுகிறது. எனக்கு மட்டுமா? உங்கள் மீது உயிரையே வைத்திருக்கும் எண்ணற்ற கழகத் தோழர்களுக்கும் இதே நிலைதான். இனி நீங்களாகவே சில கட்டுத் திட்டங்களை உருவாக்கிக் கொள்ளுங்கள். ஆறு மாதத்திற்கு ஒரு கூட்டத்தில் நீங்கள் பேசினால் போதும். எந்த நிகழ்ச்சியில் கலந்து 363