உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/377

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 சம்பத்துக்கு அண்ணனின் அறிக்கை "தூய உள்ளத்தோடும் தோழமை உணர்வோடும் நீண்ட பல ஆண்டுகளாக உங்கள் அனைவருடைய விருப்பத்தை அறிந்தும் கொள்கை நாட்டம் கொண்டும், பொது மக்கள் நட்புணர்ச்சி காட்டத்தக்க விதத்திலும் கூடிப் பணியாற்றியவன் என்ற உரிமையோடும் இதை எழுதுகிறேன்" என்று அறிக்கை தொடங்கி “நான் இந்தப் பன்னிரண்டு ஆண்டுகளில் நமது கழகம் மேற்கொண்ட கொள்கை, திட்டம், போர் முறை ஆகிய எதிலாகிலும் என் இச்சைப்படி 'எவரையும் கேட்க வேண்டியதில்லை' என்ற போக்கில் எதேச்சாதிகாரமாக 'எல்லாம் எனக்குத் தெரியும்; மற்றவர் அறியார்' என்ற மமதையுடன் நடந்து கொண்டதுண்டா? என்னை உங்களிடம் ஒப்படைத்து விட்டவன். உங்கள் எண்ணங்களை என்னுடையதாக்கிக் கொண்டவன். நீங்கள் தேர்ந்தெடுக்கும் திட்டங்களை நாட்டுக்கு அறிவிப்பவன். உங்களோடு சேர்ந்து அந்தத் திட்டங்கள் வெற்றி பெற உழைப்பவன். கோபத்துக்கு இடையிலேயும், என் வார்த்தைகளை முன் தொடர்புகள் கருதியேனும், தோழர் சம்பத்தும் மற்றத் தோழர்களும் அருள் கூர்ந்து யோசித்துப் பார்த்துத் தமது முடிவுகளை மாற்றிக் கொள்ளும்படிக் கேட்டுக் கொள்கிறேன். (அவரால்) எந்த யோசனையும் தரப்பட்டு, விட்டுவிடப் படவில்லை. கொள்கையிலே மாற்றம்வேண்டும் என்று கூறப்பட்டதில்லை. பிரிந்து போக வேண்டிய காரணம் என்ன இருக்க முடியும்? "அனைவரும் சுமுகமாக ஒன்றுபட்டு இனித்தொடர்ந்து பணியாற்று வதென உறுதி எடுத்துக் கொண்டது திருவொற்றியூர் காவலர் கூட்டத்தில் 26-2-61-ல்; தோழர் சம்பத்தும் மற்றவர்களும் கழகத்தை விட்டு வெளியேறுகிறோம் என்று அறிவித்தது 9-4-61-இல் இந்த 42 நாட்களிலா கழகம் திருத்தப்பட முடியாத அளவுக்குக் கெட்டு விட்டது? நாடு நம்பும் என்று எதிர்பார்க்கலாமா? நமது நெஞ்சமே நம்பாதே? "தாளமுத்து நடராசனிலிருந்து கோவை ஆரோக்கிய சாமி வரையில் தியாகிகள் கொட்டிய குருதி குழைத்துக் கட்டப்பட்ட கழகத்துடன், துவக்கம் முதல் இடம் பெற்றவர்களா இப்படி மின்னல் வேக நடவடிக்கையில் ஈடுபட்டுக் கழகத்தை விட்டு வெளியே செல்வது? "திரும்பி வாருங்கள்- திட்டவட்டமாக நமது கருத்தைப் பொதுக் குழுவுக்குக் கூறுங்கள்-பொதுக்குழு ஏற்றுக்கொண்டால் நான் குறுக்கே நிற்க மாட்டேன். ஏற்றுக் கொள்வேன். பொதுக்குழு உங்கள் 373