உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/387

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருந்தபோது இந்தியா என்ன செய்துகொண்டிருந்தது என்கிற சேதி எல்லாம் ஆதிக்க வரலாறு கூறுகிற கசப்பான உண்மைகள். ஆனால் சீனா விழித்து எழுவதற்கு வேகமும், விசையும், வலிவும் தன்னம்பிக்கையும் ஊட்டுவதில் இந்திய அரசியலின் நெளிவு-சுளுவு களுக்கும் பெரும் பங்கு உண்டு. சீனத்து விடுதலை வீரன் சன்யாட்சன் 'சீனத்துக் காந்தி' என்று அழைக்கப்படுவதும் ஒரு மரபு. ஆகவே சீனா, சுதந்திரமாகவே இருந்ததாகப் பாவிக்கப்பட்டாலும் அடிமையாக இருப்பதன் கேவலத்தையும், அதிகாரமில்லாத தன்னரசின் சஙகடங் கள் எவை என்பதையும் சரியாக அது கற்றுக்கொண்ட இடம் இந்தியா தான்! சீனாவின் ஆத்மிக பலம்' நம் நாட்டுப் புத்தரால் முழு வளர்ச் சியினைப் பெற்றதாகச் சொல்கிறார்கள். அதனுடைய அரசியல் தூக்கம் - அதன் மயக்கம்-தாழ்வு மனப்பான்மை- அத்தனையையும் உதறித் தள்ளிச் சீனா சிலிர்த்து எழுவதற்கும் நாம் முக்கிய காரணமாக இருந்திருக்கிறோம். அதனை 'அரக்கன்' என்று வருணித்த மேற்கத்திய அரசியல்வாதிகளை நாம் நிரம்பவும் கேலி பேசினோம். "அதனுடைய உருவம்தான் அப்படி உள்ளமோ அதன் உருவத்தைக் காட்டிலும் பெரிது-பரந்தது" என்று பேசிப் பேசி உலகத்தின் கண் முன்னால் சீனத்தை நல்லபிள்ளை ஆக்கிக் காட்டு வதற்கு நமது பிரதமர் நேரு அவர்களும், அவருடன் சேர்ந்து நாமும் செய்த முயற்சி கொஞ்சமல்ல. உலகத்துச் சமாதான வாழ்வே சீனாவை ஐ.நா. சபையில் அங்கீகரித்திடும் செயலில்தான் அடங்கியிருப்பதாக நாம் விடாப்பிடியான உறுதி காட்டி நின்றோம். இந்தப் பிடிவாதத்தின் காரணமாக நமக்கு தேசிய மட்டத்தில் ஏற்பட்ட இழப்புகளும் கணிசமானவை. எது எப்படி ஆனாலும் இந்தியா - சீனா நட்புணர்வு 'சயாமிய இரட்டையர்களைப்' போல் பிரிக்க முடியாதது என்று நாம் துணிச்சலாக நம்பிய காலமும் உண்டு. அதிலும் பாண்டுங் மாநாட்டின் போது, சீனப் பிரதமர் யார்-இந்தியப் பிரதமர் யார் - என்பதில் மேற்கத்திய நாட்டவர் குழப்பம் அடைந்திடும் விதமாகவே நடவடிக்கைகள் காணப்பட்டன. மேற்கத்தியத் தொழிலாளர்களிடத்தில் தோற்றுப்போகும் கம்யூ னிஸ்டுகள் கைவரிசை கிழக்கிந்திய விவசாயிகளிடத்தில் எப்படி வெற் றிக் கொடியினை நாட்டுகிறது பாரீர் என்று சீனாவைப் புகழ்ந்து தமிழ் நாட்டு மேடைகள் கூட அப்போது அதிர்ந்தன. பழம்பெரும் நாடுகள் இரண்டுக்கும் புத்துலகம் காண்பதில் இருக்கிற குறிக்கோள் ஒன்றே. "அதுதான் சமாதான சகவாழ்வு" என்றெல்லாம் நமது நேரு உள்பட 66 383 25 25