உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/389

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்போது நமக்குக் 'கொண்டவர்கள்'சரியில்லாததால் நமது கூரையில் சண்டை தொடங்கிற்று. அக்டோபர் 2-ஆம் நாளன்று இந்தியாவில் வடமேற்கு லடாக் பகுதியிலும், வட கிழக்கு நேபா பகுதியிலும் திட்டமிட்ட ஆக்கிர மிப்புப் போரைத் துவக்கிவிட்டனர். நாடே திகைத்தது நம்ப முடியாத கதை நடந்து கொண்டிருப்ப தாக ஒவ்வொருவரும் திடுக்கிட்டனர். தேசியத்தைப்பற்றி வாய் கிழிய அதுவரை பேசியது தவிர தேசிய 'எல்லைகளை பலப்படுத்திக் காப் பதற்குத் தவறிவிட்ட குற்றம் மக்களுக்கெதிரில் அம்மணமாக நின்றது. இந்தப் பிரச்சினையில் தி.மு.கழகமும் அறிஞர் அண்ணா அவர் களும் தொடர்ந்து வற்புறுத்தி வந்த அறிவுரைகளுக்குச் செவி மடுத் திருந்தால் சீனப் படையெடுப்பைத் தடுக்க முடியாது போயிருந்தாலும் ஆக்கிரமிப்பை எதிர்த்து நொறுக்குவதற்கு நாம் அப்போது முழுத் தயாரில் இருந்திருக்கலாம். உண்மை அறிஞர் அண்ணா எப்போதுமே கம்யூனிசத்திற்கு ஆதரவானவர். ஆனால் கம்யூனிஸ்டுகளை நம்பாதவர்; ஜனநாயகவாதிகளைப் போற்று பவர். ஜனநாயகத்தின் குறைபாடுகளையும் குளறுபடிகளையும் நன்கு அறிந்தவர். ஜனநாயக முறையில் கம்யூனிசத்தின் யான பலன்களைச் சேர்ப்பதில் தான் அவருக்கு ஆர்வம் அதிகம். அந்த அடிப்படையில் தான் கழகத்தின் கொள்கைகளும் எங்களுடைய நடை முறைகளும் இன்றளவும் இயங்கி வருகின் றன. சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் இருந்த எல்லைத் தகராறு களின் தன்மைகளைத் தி. மு. கழகத்தைப் போல் சரியாக உணர்ந் திருந்த அரசியல் கட்சிகள் அப்போது மிகக் குறைவு. ஆதலால்தான் 1961-ல் மதுரையில் நடைபெற்ற கழக மாநாட்டிலேயே, “ஐ. நா. மன்றத்தில் சீனாவுக்காகப் பல முறை வாதாடி வரும் இந்தியா எந்த வல்லரசுகளுடனும் கூட்டுச் சேராமல் உலக அரசியலில் நடுநிலைமை வகித்து வந்தும்-இந்தியத் துணைக் கண்டத்து மக்களுக்குப் பேரதிர்ச் சியை உண்டாக்கும் வகையில் இந்தியாவின் வட எல்லையின் சில பகுதிகளில் செஞ்சீனா புகுந்து ஆக்கிரமித்துக் கொண்டிரு்ப்பது இரு காரணமாக நாடுகளுக்குமிடையே உள்ள நட்புறவு கெடுவதற்குக் இருப்பதால் அச் செயலை இப்பொது மாநாடு வன்மையாகக் கண்டிக் கிறது என்று அந்தத் தீர்மானம் கூறிற்று. இது அறிஞர் அண்ணா எழுதிய தீர்மானம். செஞ்சீனா ஆக்கிர 'மிக்கிறது. இந்தியத் துணைக் கண்டத்து மக்களுக்குப் பேரதிர்ச்சியை உண்டாக்கும் வகையில் அது செயல்படுகிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவு கெடுவதற்குச் சீனா வழி கோலுகிறது; சீனாவின் 385