உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/392

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77 திருச்சியிலிருந்து விடுதலை பெற்றேன் அறிஞர் அண்ணா விடுதலை செய்யப்பட்ட இரண்டு நாட் களுக்குப் பிறகு அக்டோபர் 26-ல் நான் திருச்சி சிறையிலிருந்து விடுதலையானேன். சிறை வாசலில் அறிஞர் அண்ணா என்னை வரவேற்றார். நான் விடுதலையான அக்டோபர் 26-இல்தான் நாட்டில் நெருக்கடி நிலைமை குடியரசுத் தலைவர் இராதாகிருஷ்ணன் அவர்களால் பிரகடனப்படுத்தப்பட்டது. தண்டனைக் காலம் முழுவதும் முடிவுற்றது. திருச்சியில் நான் சிறையிலிருந்து வெளி வந்த பின்னர் இந்தச் செய்தி அண்ணாவுக்குக் கிடைத்தது. உடனே என்னைப் பார்த்து, 'நெருக்கடி நிலையைப் பிரகடனப்படுத்தித் தான் உன்னை வெளியே விடுகிறார்கள் பார்த்தாயா?" என்று அண்ணா அவர்கள் தமக்கே உரிய புன்சிரிப்போடு கேலியாகக் குறிப்பிட்ட காட்சியினை என்னால் மறக்க முடியுமா? அதே போல் அடுத்து அக்டோபர் 28 அன்று அறிஞர் அண்ணா வுக்கும் எனக்கும் சென்னையில் நடைபெற்ற ஊர்வலத்தையும் நண்பர் என். வி. என். தலைமையில் சென்னைக் கடற்கரையில் மக்கட்கடல் திரண்டு அளித்த வரவேற்பின் மாட்சியினையும் என்னால் மறக்க முடியாது. 1962 அக்டோபர் 26-ஆம் நாள் விடுதலை செய்யப்பட்ட நான் நேரே சென்னை வந்து என் வருகையை எதிர்பார்த்து மனத்திற் குள்ளேயே குமைந்து கிடந்த என் அன்னையைப் பார்க்க முடியாமல் தோழர்களின் அன்புத் தொல்லை என்னைத் தடுத்துவிட்டது. விடுதலை யானவுடன் திருச்சியில் என்னை வரவேற்று நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டேன். அன்று மாலை தஞ்சையிலும், மறுநாள் திருவாரூரிலும் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்றேன். இடையேயுள்ள ரயில் நிலையங்கள் அனைத்திலும் ஆயிரக்கணக்கான கழக மக்கள் 'திரண்டிருந்து என்னைக் கண்டு வாழ்த்துக் கூறி மகிழ்ந்தனர். 28-ம் நாள்காலை திருவாரூரிலிருந்து புறப்பட்டுநேரே சென்னைக்குத் தாள் வந்திருக்க வேண்டும். ஆனால் அண்ணா அவர்கள் காஞ்சியில் தங்கியிருந்தார்கள். "மதிய உணவுக்குக் காஞ்சிக்கு வந்துவிடு. மாலையில் இருவரும் புறப்பட்டு சென்னை சேர்ந்து ஊர்வலத்தில் கலந்து 388