உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/408

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81 அன்னையை இழந்தேன் 1963 ஜனவரித் திங்கள் என் இதயத்தில் அடுக்கடுக்காகச் சோகத்தை நிரப்பிய திங்களாகும். ஜனவரி 18-இல் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் தோழர் ப.ஜீவானந் தம் திடீரென இயற்கை எய்தினார். தமிழகத்தின் தேசிய இழப்புகளில் ஒன்றாக அதனைக் கருதவேண்டும். டார்வின் தத்துவமான பரிணாம வளர்ச்சியில் படிப்படியாக மனிதன் இன்றைய உருவம் பெற்றிருப் பதைப் படித்திருக்கிறோம். அதைப் போலவே படிப்படியாகப் பரிணாம வளர்ச்சி பெற்றுப் பக்குவப்பட்ட கம்யூனிஸ்ட் சிந்தனையாளரைத் தோழர் ஜீவானந்தத்திற்குப் பிறகு அதிகம் பேரை நாம் சந்தித்திருப்ப தாகச் சொல்ல முடியாது. தோழர் ஜீவா இருதயம் உள்ள மனிதர். அதுவும் சராசரி மனி தனுக்கு இருக்கவேண்டிய இடத்தில் இருதயத்தைப் பெற்றிருந்தவர். 'மதம் மக்களுக்கு அபின்' என்று சொன்ன மார்க்சின் உண்மையான: உணர்வுகளைத் தமிழகத்தின் பட்டி தொட்டிகள் தோறும் பிரதிபலித் தவர் அவர். மார்க்சும், லெனினும் தமிழகத்தில் சரியாக அறிமுக மானதற்குப் பெரும் பங்கினை ஏற்ற, கம்யூனிஸ்ட் தலைவர் அவர்தான் என்று கூறலாம். கொள்கையின் உறுதியும், நட்பின் பெருமையும் அவரை மக்களி டத்தில் மரியாதைக்குரியவர் என்று உணர்த்தின. தமிழகத்தில் கம்யூனிசத்தைக் கொண்டு வருவதில் அவருக்கு இருந்த ஆர்வமும் பொறுப்பும் போற்றத்தக்கவை. லெனின் மறைவிற்குப் பிறகு மார்க்சி சத்திற்குச் சரியான தலைமை கிடைத்ததா என்பது விவாதத்திற்கு உரிய விஷயம். ஆனால் தோழர் ஜீவாவின் மறைவிற்குப் பிறகு தமிழகத்தில் கம்யூனிஸ்ட்டுகளுக்குச் சரியான, திறமையான தலைமை இன்னமும் கிடைத்ததாகக் கூற இயலாது. "காலுக்குச் செருப்புமில்லை கால் வயிற்றுக் கூழுமில்லை பாழுக்குழைத்தோமடா -என் தோழனே பசையற்றுப் போனோமடா" 404