உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/412

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. . எனவேதான், அன்று காலை அறுவைச் சிகிச்சைக்கு ஆனாகி மரணப் படுக்கையில் போராடிக்கொண்டிருக்கும் அம்மாவின் நினைவு கண்களைக் குளமாக்கியபோதும், கழகத்திற்கு வந்துள்ள புதிய கேட்டினைக் களைவதற்குத் தோழர்கள் தயாராகித் தீரவேண்டும் என்ற உணர்வோடு அன்று மாலையே இராயபுரம் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டேன். இராயபுரம் பனைமரத்தொட்டி மீனவ நண்பர் களுடன் அளவளாவி இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டது எனக்கு எல்லா வகையிலும் சற்று நேரம் இதமாகத் தெரிந்தது. அன்று காலையிலிருந்து மாலைவரை இரத்தக் கண்ணீர் வடித்த என் கண்களில் அந்தக் கூட்டத்தில் பேசும்போது தீப்பொறி பறந்த தாக நண்பர்கள் சொன்னார்கள். கண்களில் தீப்பொறி பறந்ததாகச் சொன்னார்களே தவிர, நான் பேசிய பேச்சுக்களில் அண்ணா போதித்த அமைதித் தன்மை நிரம்பி வழிந்தது. 80 துன்பம் வரும்போது ஞானம் பிறக்கும் என்கிறார்கள். ஆனால் அன்று எனக்கிருந்த அத்தனைத் துயரத்திற்கும் இடையில் மக்கள் மத்தியில் அமைதியையும் பொறுமையையும்* நான் போதித்து தீரவேண்டும் என்ற உணர்வு மேலோங்கி நின்றது. அன்y நாடு நெடுகிலும் கழகத் தோழர்கள் உணர்ச்சிப் பிழம்பாகக் காட் யளித்தார்கள். 'யாருக்கு யார் தடை போடுவது?' 'ஜனநாயகத்தில் 2 பாராளுமன்றத்தின் செய்கைக்கு உள்ள இலக்கணம் என்ன?' என் றெல்லாம் தோழர்கள் கேள்விக் கணைகளை அடுக்கிக் கொண்டிருந் தார்கள். அரசியல் சட்டத்தின் அடிப்படையே பலமான விவாதத் திற்கு உள்ளாகிக் கொண்டிருந்தது. தனிப்பட்ட முறையில் எனக்கிருந்த சூழ்நிலை எதுவாயினும், நாடு இருக்கும் நிலையில் என்னைப்போன்றவர்கள் எதைப்பேசவேண்டும் என்பதைப் பயிற்றுவித்த ஆசான் என் அண்ணன். உள்ளுக்குள் துன்ப துயரங்கள் ஊற்றாகப் பெருக்கெடுக்கும் போது மனிதனுக்கு அமைதியான போக்கும் ஏற்பட்டு விடுவதை அன்று நான் அனுபவத்தில் உணர்ந்தேன். அந்தக் கூட்டத்தில் என்னைச் சந்தித்த நண்பர்கள் அனைவரும் உடல் நிலை குறித்துக் அம்மாவின் கவலை தெரிவித்தார்கள். என்னுடைய கவலை அப்போது வேறாக இருந்தது. அரசியல் சட்டத்தின் 16-ஆவது திருத்தம் பற்றிய கவலைதான் என்று சொல்லவும் வேண்டுமா? அந்தக் கூட்டத்தில். 408