உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/415

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதிலும் கழகம் என்றாலோ, அறிஞர் அண்ணா என்றாலோ, அம்மா என்னைக்கூட மறந்து விடுவார்கள். கழகத்தோடு வளர்ந்து கழகத் தோடு இணைந்து பிணைந்துவிட்ட குடும்பம் என் குடும்பம் என்று தோழர் களிடையே அசைக்கவொண்ணா நம்பிக்கை ஏற்பட்டதற்குக் காரணமே அம்மா அவர்கள்தான். அம்மாவின் இறுதி யாத்திரை இதனைத் தெளிவாக்கிற்று. ஒரு பெரிய அரசியல் தலைவருக்குச் சேர்க்கின்ற சிறப்பினை அம்மாவின் இறுதி யாத்திரையின்போது தமிழகம் அவருக்குச் சேர்த்தது. அம்மா இறந்த செய்தி கேட்டதும் அண்ணா அவர்கள் டெல்லியில் தமக்கிருந்த மிக முக்கியமான அலுவல்களையும் மறந்து சென்னைக்கு விரைந்தார். அம்மாவின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டு ஆறுதல் அளித்தது எனக்கு இதமாக இருந்தது. மோதிலால் நேரு அவர்களின் இறுதி ஊர்வலத்தின் போது காந்தி அடிகள் கலந்து கொண்டது தன்னுடைய துக்கத்தைப் பெருமளவு குறைத்ததாக நேரு சொன்னார். அதேபோல், அண்ணா அவர்களின் பரிவான அரவணைப்பும் எங்கள் குடும்பத்தினரிடையில் ஏற்பட்ட இழப்பைத் தாங்கிக் கொள் வதில் பெரும்பலத்தை அளித்தது. அது மட்டுமல்ல; அம்மா மறைவினைக் குறித்து அறிஞர் அண்ணா தெரிவித்த கருத்துக்களையும், அளித்த ஆறுதல் மொழிகளையும் இன்னமும் என் குடும்பக் கருவூலமாகப் போற்றிப் பாதுகாத்து வருகிறேன். அம்மாவைப்பற்றி அறிஞர் அண்ணா எழுதியது, என்னைப் பொதுத் தொண்டுக்கு ஆளாக்க அம்மா அவர்கள் எத்தகு காரணமாக இருந் தார்கள் என்பதைத் தெளிவாகத் தெரிவித்தது. "...கண்டவுடன், மேயர் நம்ம கட்சிதானே வரும்? அதைவிடக் கூடாது! புதுசாச் சட்டம் வருகிறதாமே, என்ன செய்யப்போறீங்க? நம்ம கட்சியைக் கேலி பண்ணிப்படம் போட்டாங்களாமே, பார்த்தீங் களா? அதுக்கு என்ன செய்யப் போறீங்க?" என்று இவைபோன்ற கேள்விக் கணைகளைக் கேட்டு ஆர்வத்தைப் பொழிந்த ஓர் அன்னையை நான் கண்டதில்லை. இப்படிப்பட்ட தாய்ச் செல்வம் பெற்றிருந்த கார ணத்தால்தான் தம்பி கருணாநிதிக்கு 'நிதி' என்று பெயரிட்டார்கள் போலும்! "வயது எழுபத்திரண்டு; தோற்றம் அப்பொழுக்கற்ற கிராமிய முறை; அணிகலன் கிடையாது; அந்த வீட்டிலே மூதாட்டி அஞ்சுகம் அம்மையார் கழக மாநாட்டிற்காக வெளியூரிலிருந்து வரும் தாய்மார் களில் ஒருவர் போல இயக்கப் பேச்சு ஒன்றிலேயே தமக்குச் சுவை 411