உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/469

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 30 89 பதினாறாவது விதியின் திருத்தத்தை எதிர்த்தேன் கழகத்தைக் கருவறுப்பதற்கென்றே பிரிவினைத் தடைச் சட்டத்தைக் கொண்டு வந்தது டில்லிப் பேரரசு. அதற்குத் துணை நின்றது - தூபம் போட்டது - அன்றையச் சென்னை அரசு! 'தமிழ்நாடு' என்று பெயர் வைக்கக்கூட மறுத்து விட்டதால்தான்-தாய் மொழிப் பற்றையே காற்றிலே பறக்க விட்டதால்தான் அன்றையக் காங்கிரசு அரசைச் சென்னை அரசு' என்று குறிப்பிட வேண்டியவனாக இருக்கிறேன்! இவ்வாறு கழகத்திற்குக் குழி தோண்டுவதையே குறிக்கோளாய்க் கொண்டு, இந்திய அரசியல் சட்டத்தின் 16-ஆவது விதிக்குச் செய்யப்பட்ட திருத்தத்தை ஆதரிக்கக் கோரி, சட்ட மன்றத்திலே தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதனை வெட்டிப் பேசிடும் பொழுது தான் தமிழினத்தின் வேதனைக் குரலை இவ்வாறு கொட்டித் தீர்த்தேன். ....அயர்லாந்து நாட்டின் விடுதலை வீரன் பியர்சே சுட்டுக்கொல்லப் பட்டான். அவன் உடல் மறைந்தது; ஆனால் அவனுடைய புகழ் மறையவில்லை. புகழோடு வாழ்கிறான். வரலாற்றிலே மறக்க முடியாதபடி ஓர் ஏடாக மாறி விட்டான். “இச்சட்டம் அரசியல் சட்டத்தின் 16-ஆவது விதிக்குச் செய்யப்படுகிற திருத்தம் என்று கூறப்பட்டாலும், இத்திருத்தத்தை. தி. மு. கழகத் தடுப்பு மசோதா' என்றும், 'பிரிவினைத் தடுப்பு மசோதா' என்றும் பல தரப்புகளில் கூறப்படுகிறது. மசோதாவைத் தாக்கல் செய்த கனம் நிதியமைச்சர் 'தி. மு. க. வினர் நாட்டைத் துண்டாடும் கொள்கையைக் கைவிட்டு விடுவர்' என்று நம்புவதாகக் குறிப்பிட்டார். "அரசியல் சட்டத்தை உருவாக்கும் போது, 'துண்டாடப்பட்ட ஒரு நிலப் பகுதிக்குத்தான் அரசியல் சட்டம் உருவாக்கப்பட்டது' என்பதை இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். "ஆங்கிலேயர்களால் ஓருறுப்பு நாடாக ஆக்கப்பட்டுப் பின்னர் அவர்கள் வெளியேறும் போது பாகிஸ்தான் பிரிவினையை ஒப்புக் கொண்டு துண்டிக்கப்பட்ட நிலப் பரப்புக்குத்தான் அரசியல் சட்டம் வகுக்கப்பட்டது. "தேசிய ஒருமைப்பாட்டுக் குழு சிபாரிசுகளின் மீதுதான் இச்சட்டம் வரப்பட்டிருக்கிறது எனக் கூறப்பட்டது. இந்தக் கொண்டு 463