உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/485

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31 ஆறு மாநிலங்களில் முதல்வர்கள் காமராசர் திட்டத்தின் கீழ் பதவியிலிருந்து இறங்கினர். அல்லது இறக்கப்பட்டனர். பதவியிலி ருந்து விலகியவர்களோ தங்களுக்குப் பின்னால், கட்சியினுள்ளே தங்கள் குழுவை சார்ந்தவர்களே முதலமைச்சர்களாகக் கோலோச்ச வேண்டும் என்பதில் குறியாக இருந்தனர். அதற்காக குடுமிப்பிடிச் சண்டையும் நடத்தினர். மத்தியப் பிரதேசம், பீகார், ஒரிசா ஆகிய மாநிலங்களில் தலைமை பதவிக்கெழுந்த போட்டிகளை தவிர்த்திடவே முடியவில்லை. இந்தப் போட்டி முற்றுந்துறந்த முனிவராகப் போற்றப்பட்ட காமராசரால் வளர்க்கப்பட்ட தமிழகக் காங்கிரசிலும் தலையெடுக்கத் தவறிவிடவில்லை. இத்துணைக்கும் திருமதி இந்திரா காந்தி அம்மையாரே அகில இந்தியக் காங்கிரசின் சார்பில் அங்கே வந்திருந்தார், முதலமைச்சர் தேர்தலைக் கண்காணித்திட ; திரு. பக்தவத்சலனாரின் பெயரைத் திரு. காமராசரே முன் மொழிந்திடவும் செய்தார். என்றாலும் திடீரென்று ஏற்பட்டு விட்டது போட்டி; திரு ஆர். வீ. சாமிநாதனே பக்தவத்சலனாரை எதிர்த்துத் தோற்றவர். இந்தியா முழுவதிலும் காங்கிரசுக் கூடாரத்திற்குள்ளே இப்படிப் போட்டியைப் புகைச்சலைக் கிளப்பி விட்டது தான், 'காமராசர் திட்டம்’ தந்திட்ட கைகண்ட பலனாகும்! அப்போது 'இந்து' ஏட்டில், அதன் டெல்லி செய்தியாளர் தீட்டியிருந்த அரசியல் திறனாய்வுக் கட்டுரையொன்றில் காரை உதிர்ந்து-கூரையும் சிதைந்து கொண்டிருந்த காங்கிரஸ் வீட்டைப் பற்றிச் சுருக்கமாகப் - பொருத்தமாக ஒரே வரியில் குறிப்பிட்டிருந்தது என் நினைவிற்கு வருகிறது: "காங்கிரசுக் குளவிக் கூட்டைக் காமராசர் திட்டம் கலைத்து விட்டது!" என்பதே அந்த வரி.